திங்கள், 20 ஜூன், 2011

ஜாமீன் மறுப்பு, கனிமொழியை குறிவைத்து தாக்கும் மர்மம் என்ன? கலைஞர் டெல்லி பயணம்


புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி திகார் ஜெயிலில் அடைபட்டு கிடக்கும் கனிமொழிக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்க மறுத்து விட்டதால் அவர் தொடர்ந்து பல மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி நாளை ( செவ்வாய்கிழமை ) அவசரமாக மகளை பார்க்க டில்லி புறப்பட்டு செல்கிறார். நாளை காலை 8.30 மணியளவில் விமானத்தில் புறப்படும் கருணாநிதி, திகார் ஜெயிலில் இருக்கும் கனிமொழியை சந்தித்து ‌ஆறுதல் கூறுகிறார்.
இவரை ஜாமினில் விடுவதா அல்லது தொடர்ந்து காவலில் வைப்பதா என சுப்ரீம் கோர்ட் இன்று முடிவு செய்தது. கடந்த மே மாதம் 20 ம்தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் இன்றுடன் 31 நாட்கள் சிறைவாசத்தை நிறைவு செய்துள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த மே மாதம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி ஓ.பி., சைனி உத்தரவிட்டதன்படி பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியுடன் ஆஜராகி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வாதாடினார். பெண் என்றும், கலைஞர் தொலைக்கட்சியில் இவர் ஒரு பங்குதாரர் மட்டுமே இவருக்கு இதில் தொடர்பு இல்லை என்றும் வாதாடினார். ஜாமின் வழங்க முடியாது என்றும் உடனடியாக கைது செய்யவும் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி கடந்த 20 ம் தேதி அறிவித்தார்.

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழி தொடர்ந்து டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் மனு ( மே. 23 ம் தேதி) தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி இவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதால் இவரை ஜாமினில் விட முடியாது. மேலும் அவர் விடுவிக்கப்பட்டால் சாட்சிகளை கலைத்து விடும் அபாயம் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை ( ஜூன் 8ல் ) தள்ளுபடி செய்தார்.

இதனையடுத்து ஜூன் 10 ம்தேதி கனிமொழி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பான முழு விவரத்தையும், கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்ற 214 கோடி என்னாச்சு என்றும் விளக்கம் அளிக்க சி.பி.ஐ.,க்கு 20 ம் தேதி வரை அவகாசம் வழங்கியது. இதனையடுத்து சி.பி.ஐ., தாக்கல் செய்த பதில் மனுவில், கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்ற 214 கோடி லஞ்சப்பபணம்தான். இது லோனாக பெறப்பட்டது என போலியான ஆவணஙகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு முக்கிய நிலையில் இருப்பதால் இவரை ஜாமினில் வழங்க கூடாது, மீறி வழங்கினால் வழக்கின் தன்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.

நீதிபதிகள் விலகல் மர்மம் ? இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தனர். இதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. நீதிபதிகள் பி.எஸ்.,சவுகான் மற்றும் ஜி.எஸ்., சிங்வி ஆகியோர் தற்போது விசாரித்தனர். நீதிபதி சிங்வியின் சிறப்பு என்னவெனில் 2 ஜி விவகாரம் தொடர்பான வழக்கை கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விசாரணையில், கனிமொழி ஒரு எம்.பி., அவரை அவர் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார் என்றும், சாட்சிகளை கலைப்பார் என்றால் இவரது வீட்டில் ரகசிய காமிரா கூட ‌பொருத்திக்கொள்ளட்டும் என்று இவரது வக்கீல் வாதாடினார். ஆனால் அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. ஜாமின் வழங்க மறுத்து விட்டனர்.

ஜாமின் கேட்டுள்ள கனிமொழி, சரத்குமார், ஆகிய இருவரும் குற்றச்சாட்டுக்கள் புனையும்வரை பொறுத்திருக்க வேண்டும். இதன் பின்னர் இவர்கள் ஜாமின் கேட்டு விசாரணை கோர்ட்டிலேயே தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் கூறி கை விரித்து விட்டனர். மேலும் கனிமொழி செக்க்ஷன் 437 என்ற கிரவுண்ட்ஸ் அடிப்படையில் ஜாமின் கேட்கலாம்.

கருத்துகள் இல்லை: