சனி, 25 ஜூன், 2011

India Visa விண்ணப்பித்த மறுதினமே விசா

இந்திய வீசா பெறுவதற்கான காலதாமதம் நீக்கம்: விண்ணப்பித்த மறுதினமே விசா
இந்தியாவுக்கு செல்வதற்கான வீசா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால் விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்த வேலை நாளில் பெற்றுக் கொள்ள முடியுமென்று தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையர் ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர் இந்தியாவிற்கு செல்வதற்கான வீசா விண்ணப்ப படிவமொன்றை தூதரகத்தில் ஒப்படைத்தால், அது இந்தியா விற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்டவருக்கு வீசா வழங்கலாம் என்ற அங்கீகாரம் கிடைத்த பின்னரே வீசா வழங்கப்பட்டது என்றும், இதனால், ஒருவர் இந்திய வீசாவைப் பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதென்றும் சுட்டிக்காட்டினார். இன்று இலங்கையில் யுத்தம் முடி வுற்று நாட்டில் சமாதானமும் அமைதி யும் திரும்பிக் கொண்டிருப்பதனால், பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு ஒருவரின் வீசா விண்ணப்பம் அன்றைய தினமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த வேலைநாளில் வீசா சம்பந்தப்பட்டவருக்கு வீசா கொடுக்கப்படும் என்று கூறினார். இப்போது இலங்கையில் அமைதி நிலைகொண்டிருப்பதனால் வெகு விரைவில் வீசாவை இந்தியா செல்லும் பயணிக்கு விமான நிலையத்தில் வைத்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை தாங்கள் தீவிர பரிசீலனைக்கு எடுத்திருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: