புதன், 17 ஏப்ரல், 2024

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர்...மண்டல வாரியாக செல்வாக்கு யாருக்கு? மெகா சர்வே ரிசல்ட்!

மின்னம்பலம் - vivekanandhan ;  மின்னம்பலம் நடத்திய மெகா சர்வேயின் முடிவுகளின்படி, 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி 45.3% வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 28.3% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடமும், பாஜக கூட்டணி19.9% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடமும், நாம் தமிழர் கட்சி 5.5% வாக்குகளைப் பெற்று நான்காம் இடமும் பெறுகின்றன.

அடுத்ததாக மண்டல வாரியாக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு கூட்டணியும் எத்தனை வாக்கு சதவீதம் பெறுகிறார்கள் என்பதைப் பிரித்துப் பார்ப்போம். தமிழ்நாட்டில் உள்ள 5 மண்டலங்களான சென்னை மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் ஆகியவற்றில் மின்னம்பலம் கருத்துக்கணிப்பில் கிடைத்த முடிவுகள் இதோ.

ஒவ்வொரு மண்டலமாக ஒவ்வொரு கூட்டணியும் பெறும் வாக்குகளைப் பார்ப்போம்.

சென்னை மண்டலம்

சென்னை மண்டலத்தில் உள்ள தென்சென்னை, வடசென்னை, மத்தியசென்னை ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளில்,

திமுக கூட்டணி 46% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

அதிமுக கூட்டணி 26% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

பாஜக கூட்டணி 21% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

நாம் தமிழர் கட்சி 6% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

கருத்து இல்லை என்று 1 % சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

வடக்கு மண்டலம்

அடுத்ததாக வடக்கு மண்டலத்தில் உள்ள திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய 11 நாடாளுமன்றத் தொகுதிகளில்,

திமுக கூட்டணி 45.5% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

அதிமுக கூட்டணி 28.1% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

பாஜக கூட்டணி 20.2% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

நாம் தமிழர் கட்சி 5.2% வாக்குகளைப் பெறுகிறது.

கருத்து இல்லை என்று 1% பேர் சொல்லியிருக்கிறார்கள்.

மேற்கு மண்டலம்

அடுத்ததாக மேற்கு மண்டலத்தில் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய 9 நாடாளுமன்றத் தொகுதிகளில்,

திமுக கூட்டணி 42.8% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

அதிமுக கூட்டணி 33.2% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

பாஜக கூட்டணி 18.4% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

நாம் தமிழர் கட்சி 4.6% வாக்குகளைப் பெறுகிறது.

கருத்து இல்லை என்று 1% பேர் சொல்லியிருக்கிறார்கள்.

மத்திய மண்டலம்

அடுத்ததாக மத்திய மண்டலத்தில் உள்ள கரூர், திருச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 நாடாளுமன்றத் தொகுதிகளில்,

திமுக கூட்டணி 46.83% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

அதிமுக கூட்டணி 28.5% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

பாஜக கூட்டணி 17.83% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

நாம் தமிழர் கட்சி 5.83% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

கருத்து இல்லை என்று 1% சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

தெற்கு மண்டலம்

அடுத்ததாக தெற்கு மண்டலத்தில் உள்ள திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 நாடாளுமன்றத் தொகுதிகளில்,

திமுக கூட்டணி 46.2% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

அதிமுக கூட்டணி 25% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

பாஜக கூட்டணி 21.7% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

நாம் தமிழர் கட்சி 6.1% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

கருத்து இல்லை என்று 1% சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

மண்டல ரீதியான வாக்கு சதவீதங்களை ஆராய்ந்து பார்க்கும் போது சில முக்கிய முடிவுகள் நமக்கு கிடைக்கின்றன.

  • திமுக எல்லா மண்டலங்களிலும் ஓரளவிற்கு சம அளவிலான வாக்குகளைப் பெறும் நிலையில் மேற்கு மண்டலத்தில் மட்டும் சற்று குறைவான வாக்கு சதவீதத்தைப் பெறுகிறது.
  • பாஜக பெறும் வாக்குகளில் சென்னை மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தில் அவர்களின் வாக்கு சதவீதம் அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த இரண்டு மண்டலங்களிலும் அதிமுக கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கிறது.
  • இன்னொரு பக்கம் தாங்கள் வலுவாக இருப்பதாக பாஜக குறிப்பிடும் மேற்கு மண்டலத்தில் சென்னை, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களை விட குறைவான வாக்குகளையே பெறுகிறது.
  • அதிமுகவின் வாக்குகளில் அதிக வாக்குகளை மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் இருந்து பெறுகிறது. தென் மண்டலத்தில் அதிமுகவின் வாக்குகள் குறைகிறது. டெல்டா பகுதிகளில் அதிமுகவின் வாக்குகள் குறையவும் இல்லாமல், அதிகரிக்கவும் இல்லாமல் தொடர்கிறது.

கருத்துகள் இல்லை: