புதன், 17 ஏப்ரல், 2024

துபாயில் கடும் மழை வெள்ளம் .. காணொளி

 மலையோரம் செய்திகள் : வெள்ளக்காடாக மாறிய துபாய், 2வருடமாக பெய்யும் மொத்த மழையும் ஒரே நாளில் கொட்டித்தீர்த்ததுள்ளது.
டுபாய் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் விமான போக்குவரத்து பலமணிநேரம் தடைபட்டுள்ளது. மிகவும் பிஸியான விமான நிலையமாகவும்  உலக நாடுகளை இணைக்கும் connect flightகள் அதிகமாக இயக்கப்படும் விமான நிலையமாக இருப்பதாலும் இன்று அனைவரின் பார்வையும் டுபாய் மீது திரும்பியுள்ளது.
டுபாய் நகரம் வருடத்திற்கு சுமார் 3.12 inches அளவு மழைவீழ்ச்சியை பெரும் நகரம் ஆனால் திங்கள் கிழமை மாலை 10மணியில் இருந்து செவ்வாய் மாலை 10மணிவரை சுமார் 6.26 inches மழை பெய்துள்ளது. இதன்காரணமாக துபாய் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
டுபாய் நகரம் ஏப்ரல் மாதத்தில் வெறும் 0.13 inches மழைவீழ்ச்சியையே இதுவரை பதிவு செய்து வந்துள்ளது. இவ்வருடம் எதிர்பாராத அளவிலான (6.26 inches) மழை பெய்துள்ளமையே வெள்ளத்திற்கு காரணமாகிறது.


துபாய் நகரின் அதி உச்ச மேலாண்மை மற்றும் நேர்த்தியான வடிகாலமைப்பினால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதன்கிழமை காலைவேளையில் அதிக விமானங்கள் வழமைபோல் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் அறியமுடிகிறது..

கருத்துகள் இல்லை: