சனி, 4 மே, 2024

சவுக்கு சங்கர் கைது - மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 மின்னம்பலம் -  christopher   :  தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    Savukku Shankar has been arrested today by Coimbatore city police cyber crime wing for the offences committed under the following sections. 294(b), 509 and 353 IPC r/w section 4 of Tamilnadu prohibition of harassment of Woman Act and section 67 of Iinformation Technology Act,2000

    — கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) May 4, 2024

அதன்படி பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் (294(b)) பெண்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் (509), அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (353), பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (67) உட்பட ஜாமீனில் வெளிவர முடியாதபடி 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: