Vasu Sumathi : பிரஜ்வால் ரேவண்ணா! இவர் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் பேரன்! ஹசன் தொகுதியின் தற்போதைய JDS MP. மீண்டும் போட்டியிடுகிறான்.
தற்போது நடந்த கொடுமை 500 பொள்ளாச்சிக்கு சமம்.
200 க்கும் மேற்பட்ட பெண்களாம். 2700 விடியோக்களாம். இவைகள் பல பென் டிரைவ்களில் ஹசன் தொகுதியில் தேர்தலுக்கு முன் நாள் வலம் வந்திருக்கிறது.
திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒன்றே என்று தோன்றுகிறது.
இது பல பேர் கைகளுக்கு மாறி, பார்த்தவர்கள் அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம் அதில் இருந்த பெண்கள் -
12 JDS கட்சிகாரர்கள், 2 பாஜக பெண்கள்,
ஒரு மிக உயர் அரசு அதிகாரியின் மனைவி ,
அரசு ஊழியர்கள், குடும்ப பெண்கள், 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தொழில் முனைவோர்கள், வேலைகாரியை கூட விட்டு வைக்கவில்லையாம்.
அதில் சிலர் நகல் எடுத்து குறும்படம் தயாரித்து வாட்சாப்பில், இவருக்கா உங்கள் ஓட்டு என்று கேட்டு பரப்பி விட்டிருக்கிறார்கள்.
அதை பார்த்த பிறகுதான் இவருடைய தேர்தல் ஏஜென்ட் இவர் பெயருக்கு களங்கம் எற்படுத்த இவை மார்பிங் செய்யபட்டு பரப்பப்படுகிறது என்று FIR பதிவு செய்தார்.
ஓரிரு படங்களை morphing செய்யலாம் 2700 வீடியோவையா?
கடந்த ஆண்டு, ஜூலை மாதத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, நவீன் கவுடா என்ற நபருக்கு எதிராக, காட்சிகள் மார்பிங் செய்யப்பட்டதாகக் கூறி, 89 ஊடக நிறுவனங்களுக்கு எதிராக, முதன்மை நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்நது ஸ்டே வாங்கினார்.
இது நீண்ட காலமாகவே யாரிடமோ சிக்கிக்கொண்டு இருக்கிறது இவருக்கு நன்றாக தெரியும்.
கர்நாடக சட்டசபை தேர்தளுக்கு முன், பிஜேபி JDS கூட்டணி உருவாவதற்கு முன் பாஜக வை சேர்ந்த தேவராஜ் கௌடா என்பவர் இந்த வீடியோக்களை ஹசன் N.R.Circle ல் வெளியிடுவேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். பின் கூட்டணி ஏற்பட்டுவிட்டதால் பேசாமல் இருந்துவிட்டார்.
திருட்டு பாஜக தெரிந்தே கூட்டணி வைத்துள்ளது. இதை வைத்து பின்னாளில் மிரட்டலாம் என்று இருந்திருக்கலாம்.
கர்நாடக முதல்வர் (SIT) சிறப்பு தணிக்கை குழு விசாரிக்க உத்தரவு போட்டிருந்தாலும், இந்த விஷயம் வெளி வந்தவுடன் அவர் ஜெர்மனிக்கு தப்பியோடி விட்டார் என்று சொல்லுகிறார்கள்.
இந்நிலையில் இன்று அங்கு பிரச்சாரம் செய்துக்கொண்டிருக்கும் இந்தியாவின் ஒரு சாபக்கேடு,
இந்த பாலியல் கொடுமையினால் கேள்விக் குறியாகியிருக்கும் பல நூறு பெண்களைப் பற்றி துளியும் கவலை படாமல்,
சமீபத்தில் காதலனால் கொல்லப்பட்ட ஒரு பெண்ணை காட்டி வேற்றுமத வெறுப்பை தூண்டி ஓட்டு பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
இது சிலருக்கு அரசியல், ஊடகங்களுக்கு செய்தி,
நமக்கு சீற்றம் ஆனால் ஒரு நிமிடம் பாதிக்கப்பட்டு உயிருக்கு பயந்து இருக்கும் அந்த நூற்றுக்கணக்கான் பெண்களின் நிலை,
அவர்கள் எதிர்காலம், சமுதாயத்தில் அவர்களுக்கு இனி இருக்க போகும் மரியாதை,...?
இவனை சும்மாவே விடக்கூடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக