சனி, 4 செப்டம்பர், 2021

அமெரிக்க ஹெலிகாப்டர்களை விமானங்களையும் எதிர்பார்த்து ஏமாந்த தாலிபான்கள் ..வெறும் உடைசல்களையே விட்டு சென்றுள்ளது

செல்லபுரம் வள்ளியம்மை : அமெரிக்க ஹெலிகாப்டர்களை விமானங்களையும் எதிர்பார்த்து காத்திருந்த தாலிபான்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அமெரிக்க தந்துவிட்டது என்று கூறுகிறார்கள்
அமெரிக்க ராணுவம் விட்டு சென்ற ஏராளமான ராணுவ தளபாடங்கள் பாவனைக்கு உதவாதவை என்று தெரிகிறது .. வெறும் பேரிச்சம் பழத்துக்கு போடவேண்டிய இரும்பு துண்டங்களை தாலிபான்களுக்கு விட்டு சென்றுவிட்டது அமெரிக்க .
அல் ஜெஸிரா நிருபர்  : காபூல் ராணுவ விமான தளம் இது ..
நேற்று இங்கு தாலிபான்கள் அளவு கடந்த உற்சாகத்தில் ஆகாயத்தை நோக்கி சுட்டும் மகிழ்ச்சி பிரவாகத்தில் இருந்தனர்
ஆனால் இன்று நிலைமை வேறாக இருக்கிறது
அமெரிக்க விட்டு சென்ற விமானங்களை பார்த்ததும் தாலிபான்களுக்கு ஏமாற்றமாகி விட்டது
தங்களை அமேரிக்கா வஞ்சித்து விட்டதாக கூறுகிறார்கள்
ஏனெனில் விமான நிலையத்தில் காணப்படும் ஏராளமான ஹெலிகாப்டர்களும் விமானங்களும் ஒருபோதும் பாவிக்க முடியாதவாறு உடைந்து நொறுங்கி போயுள்ளது
இந்த விமானங்கள் ஆப்கானிஸ்தானின் சொத்து என்றுதான் தாங்கள் கருதி இருந்ததாகவும் அமெரிக்கா தங்களை ஏமாற்றி விட்டதாக கோபத்துடன் இருக்கிறார்கள் தாலிபான்கள் நாங்கள் இப்போது ஒரு பொறுப்பான அரசாங்கம் . இந்த விமானங்கள் எங்கள் பாவனைக்காக பெரும் உதவியாக இருந்திருக்கும்
இப்போது இவை ஒன்றுக்கும் உதவாதவை ஆகிவிட்டன

கருத்துகள் இல்லை: