செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

இளவரசி தண்டனை காலம் முடியாததால் மீண்டும் சிறைக்கு சென்ற இளவரசி..

dhinakaran :  பெங்களூரு: கொரோனா தொற்றுக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் 4 ஆண்டுகள் முன்பு அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜனவரி மாதம் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட இருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறையில் சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை எடுக்க மருத்துவர்கள் அறியுறுத்தி இருந்தனர். அதனால் இளவரசிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.



கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சசிகலாவுடன் விக்டோரியா அரசு மருத்துவமனையில் இளவரசி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சசிகலாவுக்கு கொரோனா தொற்று முழுமையாக குணமடைந்ததால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சசிகலா சிகிச்சை பெற்ற இடைவெளியில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை முடிவடைந்ததால் அவர் பெங்களுருவில் உள்ள பண்ணை வீட்டுக்கு ஒய்வு எடுக்க சென்றார்.

தற்போது இளவரசிக்கு கொரோனா தொற்று முழுமையாக குணமடைந்ததால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இளவரசிக்கு இன்னும் தண்டனை காலம் முடியாததால் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சிறைக்கு அழைத்துச் சென்றனர். 

கருத்துகள் இல்லை: