திங்கள், 1 பிப்ரவரி, 2021

ஏன் அக்ரகாரங்கள் காணாமல் போனது?

Image may contain: house, sky, outdoor and nature
Prabhakar Annamalai : · ஏன் அக்ரகாரங்கள் காணாமல் போச்சின்னு மத்யமர்ல ஒரு கேள்வி. அதற்குண்டான (ஒப்புதல் வாக்குமூல) பின்னூட்டங்களை நிதானமாகப் படிச்சா மிக அழகா நமக்கு கிடைப்பது பண்டைய தமிழ்நாட்டை யாரு சுரண்டி எப்படி கொழுத்திருங்கான்னு புரிஞ்சிக்க முடியும். அண்டர்லைன் நிறைய மீள் வாசிப்பு செய்யாமலேயே! அங்கே பல பேர் வயிரு எரிந்து நினைவு கூர்வது- நில உச்ச வரம்பு சட்டம், இடஒதுக்கீடு, கோவில்களை அரசு எடுத்துக் கொண்டதுப் பற்றி பேசி திட்டி இருக்காங்க. பொறுமையா அனைத்தையும் படிச்சிட்டு என்னோட கருத்தா இப்படிச் சொல்லிட்டு நடையக் கட்டி இருக்கேன் ஆண்டான் அடிமைத்தனம் ஒழிந்தாலே, பொருளாதாரமும், கல்வியும் பரவலாக்கப்பட்டு அந்தத் தெய்வத்தின் ஆசைப்படி அனைவரும் சுபிட்சமாக வாழ முடியும். சமூகத்தை பண்மைப்படுத்துவது என்பது நிலத்தை திருத்தி பயிரிடுவதற்கு ஒப்பானதாகும்.
பழம் பெருமைக்கு ஆசைப்படுவதில் பல பேருடைய மரண ஓலம் உள்ளடங்கி இருக்கிறது என்று உணர்ந்தால் இருப்பதைக் கொண்டு சுகமாக வாழலாம்...
இப்போ,
திராவிடக் கட்சிகள் 1970களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் என்ன மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியது என்பதை ஒரு வேத விற்பன்னர் தனது ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலமாக முன் வைப்பது... (அங்கிருந்து ஒரு மாதிரி பின்னூட்டம்)
--------------என்ன பண்ணுவது? 1970/75 களில் ஆரம்பித்தது. தமிழ் நாட்டில் பயங்கர ப்ராம்மணத் த்வேஷம். பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் பாப்பானை அடி என்கிற அளவில். செய்தது என்ன? ஒண்ணு வைதீகம் 2) ஸ கூல் வாத்யார் 3)நிலம் வைத்துக்கொண்டு பண்ணையார்.
நாமே இறங்கி வேலை செய்தால்தான் விவசாயத்தில் நிலைக்கமுடியும் என்ற நிலை.
எங்கும் எதிலும் இட ஒதுக்கீடு. பிராமணர்களை ஒடுக்க கடும் முயற்சி. 
 
ஆனால் மூதாதையர்கள் செய்த நல்ல புண்ணியங்கள்,வேதம் பயின்றதின் பலன் குழந்தைகள் எந்த சலுகையும் இல்லாமல் படித்து அரசு,தனியார் நிறுவனங்கள் என்று நல்ல வேலைகளில் அமர்ந்தனர்.
அவர்களின் குழந்தைகள் நகரங்களில் படித்து மேற்படிப்பு,வேலை என்று இன்னமும் பரந்து விரிந்த உலகமெங்கும் செல்ல ஆரம்பித்தனர். 
 
பெரியவர்களும் நகரத்திற்கு குழந்தைகளோடு இருப்போம் என்று இடம் பெயர்ந்தனர். இல்லையெனில் அவர்ள் காலம் முடிந்தபின் குழந்தைகள் கிராமத்து வீடு,நிலம் இவற்றை (இனி நாமோ நம் வாரிசுகளோ இங்கே வந்து இருப்பது நடக்கப்போவதில்லை என்று) வந்த விலைக்கு விற்றுவிட்டு நகரம்/வெளிநாடுகளில் நிரந்தரமாக இடம் பெயர்ந்து விட்டனர்.
 
எனவேதான் மஹா பெரியவா வேதம் க்ஷீணிக்கக் கூடாது, வேத ரக்ஷணம் அவசியம் என்று விடாமல் போதனை செய்து இப்போது காலத்தின் தேவைக்கேற்ப வேதத்தோடு ஆங்கிலப் படிப்பும் பல பாடசாலைகளில் நடத்துகிறார்கள். வேதம் மீண்டும் துளிர்க்கிறது. ஆனாலும் எத்துணை குடும்பங்கள் மீண்டும் கிராமத்திற்கு இடம் பெயரும்? 
சொல்ல முடியாது.
முழு முதற் காரணம் சொந்த லாபத்திற்காக வேலை செய்த கேடு கெட்ட அரசியல்வாதிகள்தான் என்பது என் அசைக்க முடியாத எண்ணம்.
நன்றி: கூகுள் புகைப்படம்.

கருத்துகள் இல்லை: