![]() |
அமைச்சர் சி.வி.சண்முகம்
விழுப்புரம்:
4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்று பெங்களூரூ ஜெயிலில் இருந்து வந்த சசிகலா
கடந்த 27-ந்தேதி முறைப்படி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு
இருந்ததால், தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று
மதியம் 12 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே
வந்தார்.
அவர் கார் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது காருக்கு முன்னும்
பின்னும் பல கார்கள் அணிவகுத்து வந்தன. சசிகலாவின் காரில் அ.தி.மு.க. கொடி
பொருத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறும்போது,
அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள்
சுயநலத்திற்காக கூறுகின்றனர். அதிமுக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை
பயன்படுத்தியது கண்டனத்திற்குறியது என்றார். இதற்கிடையே விழுப்புரத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்திய சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக