வியாழன், 18 ஜூலை, 2019

கர்நாடகா .. சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. ராஜினாமாவை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ காலகெடு விதிக்க முடியாது. .. உச்ச நீதிமன்றம்

பெங்களூரு: தினமலர் : கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனை கர்நாடக சபாநாயகரும், காங்., கட்சியும் வரவேற்றுள்ளனர். அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 15 பேர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று (ஜூலை 17) தீர்ப்பு வழங்கியது.
இதில், சபாநாயகருக்கு தாங்கள் உத்தரவிட முடியாது. ராஜினாமாவை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ சபாநாயகருக்கு காலகெடு விதிக்க முடியாது. நாளை நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களை கட்டாயப்படுத்த முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தீர்ப்பு பற்றி கர்நாடக தலைவர்கள் கருத்து : சபாநாயகர் ரமேஷ்குமார்: வரவேற்கத்தக்க வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில் அரசியலமைப்பை மீறி முடிவெடுக்க மாட்டேன். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் எனது பொறுப்பு அதிகரித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் நம்பிக்கையை காப்பாற்ற நான் முயற்சிப்பேன் என்றார்.

 ஆபரேஷன் கமலா (தாமரை) தோல்வியடைந்துள்ளது என கர்நாடக காங்., தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளது.

பா.ஜ., எடியூரப்பா : சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு கிடைத்துள்ள நியாயமான வெற்றி.இது
இடைக்கால உத்தரவு மட்டுமே. சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்து எதிர்காலத்தில் சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும். கர்நாடக முதல்வர் தன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார். நாளை நம்பிக்கை கிடைக்காவிட்டால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
 இதற்கிடையில் தீர்ப்பு வெளியான சமயத்தில் சிருங்கேரியில் உள்ள சங்கரமடத்திற்கு சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, சாமி தரிசனம் செய்துள்ளார்

கருத்துகள் இல்லை: