![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIbNae_WAiVqc0kSBWBfsCYVgjGA505RNgYn2OHDSeuANxHdPXH7WCHdAWBl60AehT4DbVx2TBqRC_sohkL8X6o2_3U8w8It9gLxyUxgxzuBYI4Jm14mePiRkIYmA2q6ct4GREWmfhc3TS/s400/66658227_2275165409199658_5705814828115820544_n.jpg)
வாழ்வாதாரத்திற்காக கொடுத்த நிலத்தை பறித்த அதிகாரிகள்
தீக்கதிர், ஜூலை 16, 2019
திண்டுக்கல், ஜுலை 15- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கா னலில் 30 ஆண்டுகளுக்கு முன் கொத்த டிமை முறையிலிருந்து மீட்கப்பட்டு திண்டுக்கல்லில் குடியமர்த்தப்பட்ட இலங்கை அகதிகளின் வாழ்வாதா ரத்திற்காக கொடுக்கப்பட்ட நிலத்தை அரசு அதிகாரிகள் சிட்டிசன் திரைப்ப டப்பாணியில் ஏமாற்றி பிடுங்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடை பெற்றுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு. இலங்கையில் உள்ள உவா மாகாணத்தின் தலைநகர் பதுளை ஆகும். உலகின் பிரபலமான கருப்புத் தேயிலை உற்பத்தியாகும் பதுளை தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய தமிழர்கள் உள்நாட்டு யுத்தம் கார ணமாக 1976ல் வெளியேறி தமிழகத்தில் மண்டபம் முகாமுக்கு வந்தார்கள். அங்கு இருந்து சில புரோக்கர்களால் கொடைக்கானல் மலையில் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி அழைத்து வரப்பட்ட இலங்கை அகதிகள் கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதி யில் உள்ள ஒரு தோட்டத்தில் 1980ல் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்.
கொத்தடிமையிலிருந்து மீட்ட ஆட்சியர்
அப்படி அமர்த்தப்பட்ட இலங்கை அகதிகளை அந்த தோட்டத்தின் உரிமை யாளர்களான குருசாமி மற்றும் ராஜ சேகர் ஆகியோர் கொத்தடிமைகளாக வைத்திருந்தனர். குறைவான கூலி, தொடர் வேலை, உணவளிக்காமலும், மிகக்கொடூரமான அடக்குமுறை கார ணமாக இலங்கை தமிழர்கள் அப்போது கொடைக்கானல் சப்- கலெக்டராக இருந்த குர்னிகால் சிங்கிடம் புகார் கொடுத்தனர். இதனையடுத்து சப்- கலெக்டர் குர்னிகால் சிங் நேரடியாக தோட்டத்திற்கு சென்று 157க்கும் மேற்பட்ட இலங்கை அகதி குடும்பங்க ளை மீட்டார். இந்த செய்தி அப்போது உலகம் முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
நிலம் வழங்கப்பட்டது
அப்படி மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் கொடைக்கானல் பகுதியில் குண்டுப்பட்டி, விடுதலை நகர் போன்ற பகுதிகளிலும், ஒட்டன்சத்திரத்தில் எல்லைப்பட்டியிலும், திண்டுக்கல்லில் விநாயகர் புரத்திலும் குடியமர்த்தப் பட்டார்கள். அப்படி குடியமர்த்தப்பட்ட இலங்கை அகதிகளுக்கு வாழ்வாதா ரமாக வெள்ளோடு யானைவிழுந்தான் ஓடை அணையின் அருகே 20 குடும்பங்க ளுக்கு தலா 2 ஏக்கர் வழங்கப்பட்டது. நிலம் வழங்கும் காலத்தில் அணை கட்டப்படவில்லை. பொக்லைன் போன்ற ராட்சத இயந்திரங்கள் இல்லாத அந்த காலத்தில் வழங்கப்பட்ட நிலம் குண்டும் குழியுமாக கற்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் அந்த நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்ய முடி யாத நிலையில் இலங்கை தமிழர்கள் அந்த நிலத்தை அப்படியே போட்டு விட்டனர். அரசு அதிகாரிகளிடம் வேறு இடம் கேட்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் விக்ரம் கபூர், சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட பலரிடம் இம்மக்கள் முறையிட்டனர். அவர்கள் வேறு இடம் தருவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் மாற்று நிலம் வழங்கப்பட வில்லை.
இரவு நேரத்தில் நடந்த மோசடி
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் 20 குடும் பத்தலைவர்களை சின்னாளபட்டியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நிலம் மாற்றித்தருவதாக கூறி திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். 2013ம் ஆண்டு கோட்டாட்சியர் முன்னிலையில் இலங்கை அகதிகளின் நிலங்கள் ஒப்படை செய்யப்பட்டு சிட்டிசன் பட பாணியில் பறிக்கப்பட்டன. நிலத்தை இயந்திரம் மூலம் பண் படுத்தி தருவதாக ஒரு பொய்யான வாக்குறுதியை கொடுத்து படிக்காத இலங்கை அகதிகளிடம் கோட்டாட்சியர் முன்னிலையில் கையெழுத்து பெறப் பட்டது. இதனையடுத்து அகதிகளின் நிலங்களில் இயந்திரங்கள் இறக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தங்கள் நிலத்தை அரசு சுத்தம் செய்து தருகிறது என்று அதனை பார்வையிட சென்ற போது நிலத்திற்குள் வராதீர்கள். இந்த நிலத்தை அதிகாரிகளிடம் நாங்கள் பணம் கொடுத்து வாங்கிவிட்டதாக சின்னாளபட்டியைச் சேர்ந்த அந்த பிரமுகர் கூறியுள்ளார். இதனால் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நம்மை நம்ப வைத்து ஏமாற்றி நிலங்களை பறித்து விட்டதாக அப்போது தான் உணர்ந்தார் கள்.
கதறி அழும் அகதிகள்
இது தொடர்பாக இந்த காலனியின் பெரியவர்கள் பெரியசாமி, சோமநா தன், ஆறுமுகம், புஷ்பமலர் உள்ளிட் டோர் நம்மிடம் தமிழ் மக்களும், தமிழக அரசு அதிகாரிகளும் இவ்வளவு மோசடி செய்வார்களா? தமிழ் இனம் என்று சொன்னார்களே என்று செய்த தவறுக்காக கதறி கதறி அழுதார்கள். இதனையடுத்து இழந்த நமது நிலத்தை பெற வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் சின்னாளபட்டியில் உள்ள ஒரு வழக்கறிஞர் மூலம் நீதி மன்றத்தின் கதவுகளையும் தட்டி யுள்ளார்கள். ஆயிரக்கணக்கான கரங்களும் நீதியின் கதவுகள் திறக்கும் என்று தட்டிக்கொண்டிருக்கும் சூழலில் புதிய கரங்களாக இலங்கை அகதிகளும் இணைந்துள்ளார்கள். இந்த அகதிகள் தங்களுக்கான நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இலமு, திண்டுக்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக