

பருப்பு விலை கிலோவுக்கு 130 முதல் 200 ரூபாய் ஆகியது. இந்த பற்றாக்குறையால் பாஜக அமைச்சர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் பெற்றனர்.
ராணுவக் கண்காட்சி ஊழல் (கோவா)- DEFENCE EXPO SCAM (GOA).

மருத்துவக்கல்லூரி தேர்வில் ஊழல்! (DMAT SCAM).

மத்தியப்பிரதேச மாநில பாஜக ஆட்சியில்
ஊழல்கள் அடுத்தடுத்து தலைவிரித்தாடின. மருத்துவ கல்லூரி அனுமதித் தேர்வில்
10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமானது. 2009
ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் தனியார் கல்லூரி மேனேஜ்மெண்ட் கோட்டாவில்
ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது.
இந்த ஊழல் வியாபம் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது என்றும்
தெரிவிக்கப்பட்டது.
பண மதிப்பிழப்பு ஊழல்! (DEMONETISATION).
பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளிவருவதற்கு
முன்னரே பாஜக தலைவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கொட்டப்பட்டது என்று
மீடியாக்களில் தகவல்கள் வந்தன. அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் 10 பண
பரிவர்த்தனைகளை ஆதாரமாக கொண்டு இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன.
பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்சிக்கு ஏராளமாக நிலம் வாங்கப்படுகிறது.
நாங்கள் கையெழுத்து மட்டுமே போடுகிறோம். மற்ற படி பணம் முழுவதும்
கட்சியிலிருந்தே வருகிறது என்று பாஜக எம்எல்ஏவான சஞ்சீவ் சவ்ரஸியா
கூறினார். இந்த நிலம் அனைத்தும் கட்சி அலுவலகங்கள் கட்டவும், வேறு
காரணங்களுக்காகவும் வாங்கப்படுவதாக அவர் கூறினார்.
முந்தைய பகுதி:
ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி3<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக