
Pravin Kumar : அடாவடி வசூலை தடுத்து, நள்ளிரவில் சுங்கச்சாவடியை திறந்து விட்ட கலெக்டர்.! கேரள மாநிலம் திருசூர் மாவட்ட ஆட்சியர் அனுபமா திருவனந்தபுரத்தில் கலெக்டர்கள் கூட்டம் முடித்து திருசூர் திரும்பு வழியில் தனது மாவட்ட எல்லைகுட்பட்ட நான்கு வழிச் சாலை சுங்கச்சாவடியில் பல நூறு வாகனங்கள் இரவு 11 மணிக்கும் வரிசையில் சுங்கம் செலுத்த நிறத்தி வைக்கப்பட்டிருந்தது, கலெக்டர் அனுபமாவும் சிக்கி கொண்டார்.
நிலைமையை உணர்ந்த கலெக்டர்/மாவட்ட போக்குவரத்து அதிகாரி, சுங்கச்சாவடியில் ஒரு வாகனம் 3 நிமிடங்களுக்கு மேல் வரிசையில் நிற்க கூடாது, 5 வாகனங்களுக்கு மேல் வரிசையில் இருக்க கூடாது என்ற விதிகளை சுங்கச்சாவடி மீறியதை சுட்டிகாட்டி கலெக்டர் காவல்துறை உதவியுடன் அனைத்து வாகனங்களையும் சுங்கம் செலுத்தாமல் விரைவாக கடத்திவிட உத்தரவிட்டார்.
மேலும் இது போன்று வாகனங்களை தாமதப்படுத்தினால் சுங்கச்சாவடி உரிமையை ரத்து செய்யப்படும் என குறிப்பாணையையும் வழங்கினார். அவர் ஒரு மணி நேரம் அங்கேயே இருந்து வரிசையில் நின்ற அனைத்து வாகனங்களையும் கடத்தி விட்டு சென்றார்...
நம்ம ஊர்லயும் கலெக்டர் இருக்கிறாங், கார்பரேட்களுக்கு கூஜா தூக்கி திரிபவர்கள். பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை கார்பரேட்களும்/அரசியல் வாதிகளுமே குத்தகை எடுத்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக