புதன், 17 டிசம்பர், 2014

லிங்கா திருட்டு சிடி! சட்டத்தை கையிலெடுக்க மறைமுக வேண்டுகோள்? ஊத்திக்கிட்ட படத்துக்கு ஓய்யாரகொன்டையா?

லிங்கா திருட்டு விசிடியை ரசிகர்கள் தடுக்க வேண்டுமாம் - இனியாவது விழித்துகொள்.. இவனுங்க லாபம் சம்பாதிக்க ரசிகர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என்று சொல்வது தவறு.. பாதிக்க படுவது ரசிகனின் வாழ்கை. படம் வெளியான அன்னிக்கி ரூ.200 முதல் ரூ.1000 வரை ஒரு டிக்கெட்டுக்கு கொடுத்தது போதாம, இந்த வேலையையும் ரசிகன் செய்யனுமா. என்னய்யா ரசிகன் என்றால் இளிச்சவாயன்னு எழுதிவசிருக்கா.. தமிழா இனியாவது விழித்துகொள்..
லிங்கா' படத்தின் திருட்டு 'சிடி'யை ஒழிக்க, ரசிகர்களே, சட்டத்தை கையில் எடுத்து கொள்வது போல், நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என, நடிகர் ரஜினி பட தயாரிப்பாளர் அறிவித்துள்ளது, காவல் துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது.நடிகர் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்' என்ற பெயரில், செய்தித் தாள்களில், அதிரடியாக ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில், 'உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும், நடிகர் ரஜினி நடித்த, 'லிங்கா' திரைப்படத்தின் உரிமம் பெறாத, திருட்டு, 'சிடி'க்கள், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு வினியோகம் செய்பவர்களை கண்டுபிடித்து, காவல் துறையில் புகார் செய்து ஒப்படைக்க வேண்டும்' என, ரசிகர்களிடம் கோரப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுத்து, படத்தின் வெற்றிக்கு உதவுமாறும் கேட்டு கொள்ளப்பட்டு இருப்பதுடன், 'ஒத்துழைப்பு தரும் ஒவ்வொருவரையும் கவுரவிக்க காத்திருக்கிறோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தை திருட்டு vcd யிலும் பார்க்க ஒன்று மில்லை


தமிழகம் முழுவதும் திருட்டு 'சிடி'களை ஒழிக்க, சி.பி.சி.ஐ.டி.,யில் தனியாக ஒரு பிரிவே செயல்படுகிறது. அங்கு பணியாற்றும் போலீசார், அவ்வப்போது, அதிரடி சோதனை நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். அதுபோல், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில் இடம் பெற்றுள்ள திருட்டு, 'சிடி' ஒழிப்பு பிரிவு போலீசார், கடைகளில் சோதனை செய்து, பலரை கைது செய்து வருகின்றனர். சிலர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்க, தயாரிப்பாளர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு, காவல் துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஒவ்வொரு நடிகரும், சட்டத்தை கையில் எடுத்து கொள்வது போல், ரசிகர்களை தூண்டி விடுவார்களேயானால், நாங்கள் எதற்காக இருக்கிறோம்?' என, கேள்வி எழுப்புகின்றனர்.

நடிகர் ரஜினியை நேரடியாக சந்திக்க, ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில், 'திருட்டு, 'சிடி' ஒழிப்புக்கு ஒத்துழைப்பு தரும் ஒவ்வொருவரையும் கவுரவிக்க காத்து இருக்கிறோம்' என்ற அறிவிப்பு, எந்த மாதிரியான, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, ரஜினி கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி., திலகவதி கூறியதாவது: எந்த ஒரு குற்றத்தையும் தடுக்க, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. ஆனால், கட் - அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களின் மனப்போக்கு எப்படி இருக்கும் என்பது, நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தற்போது, இசைக்கு விழாகோலம் காணும் மார்கழி மாதம். இசை 'சிடி'க்கள் விற்கும் கடைகளில், கூட்டம் அதிகமாக இருக்கும். வெளிநாட்டவர் அதிகம் பேர் வருவர். அதுபோன்ற சமயங்களில், ஆர்வ கோளாறு காரணமாக, ரசிகர்கள் தரும் தொல்லைகள் நல்ல பலனை தராது. திருட்டு, 'சிடி'களை ஒழிக்க, காவல் துறையில் தனிப் பிரிவுகள் உள்ளன. குற்றம் புரிவோரை கைது செய்யவும், அவர்கள் மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க, நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களை எடுத்து வைக்க வேண்டும். அதை எல்லாம், இந்த ரசிகர்கள் செய்வரா? இதுபோன்ற அறிவிப்புகள் தேவையில்லா சிக்கல்களை தான் ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: