சனி, 6 செப்டம்பர், 2014

தமிழக அரசின் தவறுகளை சேகரிக்கும் சு சாமி : சீண்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறார்

பிடிபட்ட தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை விடுவிக்க வேண்டாம்' என, இலங்கை அதிபர் ராஜபக் ஷேவிடம் வலியுறுத்தினேன் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி சொல்ல, விவகாரம் தமிழகத்தில் பற்றி எரிகிறது. மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சி ஆதரவு நிலைபாட்டில் இருக்கும் சிறிய கட்சிகள் என, பலரும் சாமிக்கு எதிராக கச்சை கட்டியிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சாமியின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, நேற்றும், காஞ்சிபுரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தீனன் என்பவர் தலைமையில், கொடும்பாவி கொளுத்தியிருக்கின்றனர்.   ஆனானப்பட்ட யானைக்கும் அடி சறுக்கும் சு. சாமி தன்னை பெரிய மேதாவியாக காட்டிக்கொண்டு பலருக்கும் குடைச்சல் கொடுத்துகொண்டுள்ளார் அது ஒரு நாள் அவருக்கே தீவினையாய் முடியும் சு சாமியால் மீனவர்கள் விடுவிக்கபட்டார்கள் என்பது கேலிக்குரியானது அப்போ மோடியால் இல்லையா?


இந்த விவகாரத்தில், சாமியை கண்டித்து, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத, சாமியும் முதல்வரை குற்றம்சாட்டி, மோடிக்கு விளக்க கடிதம் அனுப்பியிருக்கிறார். இதனால், அ.தி.மு.க., தரப்பு சாமி மீது, கூடுதல் எரிச்சலோடு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே, தமிழகம் முழுவதும் சாமிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும், தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையிலேயே, அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் சின்ன சின்ன கட்சிகள், போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாக சொல்கின்றனர். இப்படி போராட்டம் நடத்துபவர்கள், 'சுப்ரமணிய சாமியை நாடு கடத்த வேண்டும்; அவரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம்' என்று, கோஷமிடுகின்றனர். இதனால், அ.தி.மு.க.,வுக்கு எதிராக, சாமி விரைவில் களம் இறங்கப் போவதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, சாமி ஆதரவாளர்கள் கூறியதாவது: இலங்கையில் பிடிபட்ட, 319 தமிழக மீனவர்களை மீட்க, சாமி தான் முயற்சித்தார். ஆனால், அது குறித்து எந்த முயற்சியும் எடுக்காதவர்கள், இப்போது, சாமிக்கு எதிராக, பலரையும் தூண்டி விடுகின்றனர். இப்படி செய்கிறவர்கள், மீனவப் படகுகளையும், புதிதாக பிடிபட்ட, 15 மீனவர்களையும் மீட்க, உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதைவிட்டு விட்டு, சாமிக்கு எதிராக, ஆதரவு கட்சியினரை தூண்டுவதால், அ.தி.மு.க.,வுக்கு தான் சிக்கல் ஏற்படும். தன்னை கண்டித்து, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியதும், அதற்கு விளக்கம் அளித்து, சாமியும் மோடிக்கு கடிதம் அனுப்பினார். அதில், ஜெயலலிதாவை விமர்சித்து சில விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக, இதுவரை பதிலளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, மவுலிவாக்கம் கட்டட இடிபாடு உட்பட, தமிழக அரசின் செயல்பாடுகளில் உள்ள குளறுபடிகள், தவறுகள் குறித்து, சாமி விவரம் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார். தேவையில்லாமல், சாமியை சீண்டுபவர்களுக்கு, தக்க பாடம் புகட்டுவார். முன்னதாக, உள்ளாட்சி இடைத்தேர்த லில் அ.தி.மு.க.,வுக்கு எதிராக, பா.ஜ., வுக்கு ஆதரவாக சாமியை பிரசாரம் செய்ய வைக்கவும், ஏற்பாடுகள் நடக்கின்றன.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: