சனி, 15 மே, 2010

உலகில் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததில்லை. நாம் அதனைச் செய்திருக்கிறோம்.

உலகில் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததில்லை. நாம் அதனைச் செய்திருக்கிறோம். பயங்கரவாதத்தை தோற்கடித்தமை தொடர்பில் எமது அனுபவங்களை வேறு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும் நாம் தயாராக இருக்கிறோம் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். யுத்தத்தால் உடல் அவயங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அனைத்து இராணுவத்தினரின் பங்களிப்பினாலும் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது. தாய்நாட்டுக்காகத் தமது உடற்பாகங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாக இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்” என அவர் மேலும் கூறினார். ‘பிரேவ் ஹார்ட்’ செயற்திட்டத்தின் மூலம் அநுராதபுரத்திலுள்ள அங்கவீனமுற்ற 200 இராணுவ வீரர்களுக்கு இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை: