வெள்ளி, 14 மே, 2010

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு 500 பேர் சேர்ப்பு

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேரில் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக யாழ். நகரிலிருந்து பொலிஸ் சேவைக்கு ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்திலிருந்து தகுதிவாய்ந்த இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு கோரப்பட்டிருந்தன.
இதன்படி சுமார் 6000 விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திரு ந்தன. குறிப்பிடப்பட்ட வயதெல்லையையும் விஞ்சிய வயதையுடையவர்களும், விவாகமானவர்களும் விண்ணப்பித்திருந்தனர். 6000 விண்ணப்பங்களுள் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட 1500 பேர் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டி ருந்தனர்.
2009ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பயனாக 500 பேர் மட்டுமே பொலிஸ் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு ள்ளனரென பொலிஸ் தலைமையக ஆட்சேர்ப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.
சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேருள் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் எஞ்சியவர்கள் 133 பேர் இரண்டாவது கட்டமாக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்படவுள்ளனர். பயிற்சி கள் முடிவடையும் பட்சத்தில் இர்கள் யாழ். மாவட்டத்தில் குறி ப்பாக வடமாகாண பொலிஸ் நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்படவுளளதாக பொலிஸ் தலைமையகம்​ தெரிவிக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

கருத்துகள் இல்லை: