புதன், 7 ஜனவரி, 2026

திராவிட தோழர்களுக்கு இருக்கும் ஈழ உணர்வு ஏன் புலம்பெயர் தமிழருக்கு இல்லை

 ராதா மனோகர் : தோழர் அருள்மொழியின் இந்த பேட்டியில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன!
போராட்ட காலங்களில் ஏறக்குறைய எல்லா திராவிட அமைப்புக்களுக்கும் புலிகளையே ஆதரித்து நின்றனர்.
அவர்களின் சகோதர படுகொலைகள் இஸ்லாமிய இனச்சுத்திகரிப்பு போன்ற அக்கிரமங்களை கண்டும் காணாதது போல நடந்த கொண்டமை மிகப்பெரிய சோகம்.
ஆனால் நாம் அதை இப்போது கடந்து போகவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
திராவிட இயக்கங்களின் ஆதார கோட்பாடே சுயமரியாதைதான் - சமூகநீதிதான் -சுயசிந்தனைதான்!   
இதில் எந்த புரிதலும் அற்ற துரோகிஸ்தானியர்களை திராவிட சித்தாந்தவாதிகள் ஆதரித்தமை திருத்தவே முடியாத ஒரு வரலாற்று தவறுதான்.
இப்போது அவர்களில் பலரும் இது பற்றி சிந்திக்கிறார்கள்.
மறுபரிசீலனை செய்கிறார்கள்.


அந்த போராட்டத்தின் தோல்வியே அதன் வெறுமையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
இனி அந்த சித்தாந்த சறுக்கல்களை பற்றி சிந்திப்பதை விடுத்தது அடுத்த கட்டத்திற்கு நாம் நகரவேண்டும் என்ற கருத்துதான் அருள்மொழி அவர்களின் பேச்சில் தெரிகிறது   
திராவிட கோட்பாட்டை சமரசம் செய்ததன் விளைவு இன்று சீமான் போன்ற அசல் ஆரிய புல்லுருவிகள்  அங்கும் இங்குமாக முளைவிடுகிறது.
தமிழகத்தின் சுயமரியாதைக்கு தமிழ் தேசிய போர்வையில் ஆரியம் இன்று சவால் விடுகிறது! 

குறிப்பாக தோழர் பாருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலேயே கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவமும் அதை திராவிட இயக்கங்கள் எதிர்கொண்டு மதச்சண்டைக்குள் தமிழ்நாட்டை இழுத்து விடும் சங்கிகளின் சதியை முறியடித்த விடயமும் இவரின் பேச்சில் முக்கியமானது.
போராட்டத்தில் நடந்த தவறுகள் பற்றியும் குறிப்பிடுகிறார் 
எல்லாவற்றையும் வரலாற்று ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்,
இந்த விடயத்தில் தோழர் அருள்மொழி ஒரு முன்னோடி. 

புலம்பெயர் தமிழர்களின் ஈழ உணர்வு பற்றி இவர் கூறும் உண்மை பலருக்கு சுடும்.
இவரின் இந்த குறிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இது பற்றி அவர் கூறுகையில் :
அதர்மம் மனோஜ் முக்கியமான கருத்தை சொல்லியுள்ளார்.
2009 க்கு முன்னால் புலிகளுக்காக உழைத்த பாடுபட்ட ஒருத்தர் கூட இன்று அந்த பிரச்னையை நினைத்தால் பேச ஆரம்பித்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்
இந்த செய்திகளை எல்லாம் .வந்து ... இவங்களுக்கு சொல்ல முடியாது 
முதலில் அவங்களால் சிரிச்சுக்கிட்டு பேச முடியாது.
ஏன்?
2009 இல் நடந்தததிற்கு  யாரும் ஒண்னும் பண்ண முடியாது  .. தடுத்திருக்க முடியாது 
ஆனால் நம்மால எல்லாம் தடுக்க முடியாம போச்சே 
அப்படிங்கிற ஒரு குற்ற உணர்ச்சி 
ஈழத்தமிழர்கள் உலகம் முழுக்க இருக்காங்க 
நல்ல நிலமைல வாழ்ந்திருக்காங்க  வாழ்ந்துகிட்டு இருக்காங்க 
அவங்க எல்லாம் அடையாத குற்ற உணர்ச்சியை புலிகளுக்குக்காக உதவி செய்து தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை தொலைத்த  திராவிட இயக்க தோழர்கள் அடைஞ்சாங்க ..இன்னைக்கு வரைக்கும் ..
நீங்க எப்படி அதை ஒரு காமெடியாகவும் கற்பனையாகவும் கதைகளாகவும் சிரிச்சு சிரிச்சு எப்படி பேச முடியுது?
முழு பேச்சையும்  கேளுங்கள்! 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நாய்க்கு பிறந்த பன்றி
வாயை திறந்தால் பொய்தான்