tamil.goodreturns.in -Prasanna Venkatesh : அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட (Deportation) விஷயம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் பேசப்பட்டது,
குறிப்பாக விமானத்தில் இந்தியர்களை கொண்டு வந்த விதம் குறித்து கடும் விமர்சனம் எதிர்கொண்டது.
இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி 'டான்கி ரூட்' (Donkey route) போன்ற ஆபத்தான வழிகளில் எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் தான்.
இன்னும் சிலர் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது (Visa overstay) மற்றும் மாணவர் விசா விதிகளுக்கு மாறாக பகுதிநேர வேலைகளில் ஈடுபடுவது போன்ற குற்றத்திற்காகவும் நாடு கடத்தப்பட்டனர்.
ஆனால் அமெரிக்காவை காட்டிலும் சவுதி அரேபியா தான் இந்தியர்களை அதிக எண்ணிக்கையில் நாடு கடத்தியுள்ளது. அமெரிக்கா இந்த ஆண்டு வெளியேற்றப்பட்ட இந்தியர்களை காட்டிலும் சுமார் 4 மடங்கு அதிகமான இந்தியர்களை சவுதி அரேபிய அரசு அனுப்பியுள்ளது.
அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சவுதி அரேபியா.. தாய் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படும் இந்தியார்கள்..!
மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் உலகின் 81 நாடுகளில் இருந்து 24,600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்த தரவு ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டது .
அமெரிக்காவில் இருந்து 2025இல் சுமார் 3,800 இந்தியர்கள் தாய் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர், 2009ஆம் ஆண்டிற்கு பின்பு அதிக எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் இருந்து 3,414 பேரும் ஹூஸ்டனில் இருந்து 234 பேரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமெரிக்காவை காட்டிலும் வளைகுடா நாடுகளில் இருந்து அதிக இந்தியர்கள் தாய் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிகப்படியாக சவுதி அரேபியா 11,000 இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதை தொர்ந்து மியான்மரில் இருந்து 1,591 பேரும், மலேசியாவில் இருந்து 1,485 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 1,469 பேரும், பஹ்ரைனில் இருந்து 764 பேரும், தாய்லாந்தில் இருந்து 481 பேரும், கம்போடியாவில் இருந்து 305 இந்தியர்கள் தாய் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.
இப்படி அனுப்பிவைக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் விசா அல்லது தங்கும் அனுமதி காலம் தாண்டி இருப்பவர்கள், வேலை செய்ய அனுமதி அளிக்கும் ஆவனம் இல்லாமல் பணியாற்றுதல், தொழிலாளர் சட்ட மீறல், சிறு குற்றங்கள் காரணமாக வளைகுடா நாடுகளில் அதிகம் வெளியேற முக்கிய காரணமாக உள்ளது.
வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் கட்டட வேலை, பராமரிப்பு வேலை அல்லது வீட்டு வேலைக்காக செல்லும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் தான், இவர்கள் பெரும்பாலும் முகவர்கள் மூலம் செல்கின்றனர். உள்ளூர் சட்டங்கள் பற்றி தெரியாமல் பணியில் அமர்த்தப்படுவதும் அல்லது சிறு குற்றங்களில் ஈடுபடுவதாலும வளைகுடா நாடுகளில் இருந்து மக்கள் அதிகளழில் நாடு கடத்தப்படுகிறார்கள்.
மியான்மர் மற்றும் கம்போடியாவில் இருந்து இந்தியர்கள் தாய் நாட்டிற்கு அனுப்ப வேறு சில முக்கியமான காரணங்கள் உள்ளது. இந்த நாட்டில் இந்தியர்கள் அதிகம் சம்பள கொண்ட டெக் மற்றும் ஐடி வேலை என ஏமாற்றி அழைத்துச் சென்று அவர்களை சைபர் குற்றங்களில் ஈடுபட வைத்து பின்னர் கைது செய்து நாடு கடத்துகின்றனர்.
மாணவர்களைப் பொறுத்தவரை இங்கிலாந்தில் இருந்து 170 பேரும், ஆஸ்திரேலியாவில் இருந்து 114 பேரும், ரஷ்யாவில் இருந்து 82 பேரும், அமெரிக்காவில் இருந்து 45 பேரும் இந்தியாவுக்கு அனுப்பட்டு உள்ளனர். விசா விதிகளை மீறுதல் அல்லது உள்ளூர் சட்டங்களை பின்பற்றாமால் இருப்பது போன்றவை காரணங்களுக்காக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.
Over 24,600 Indians Deported in 2025: Saudi Arabia Tops List with 11,000, Ahead of US Crackdown
In 2025, more than 24,600 Indians were deported from 81 countries, according to Ministry of External Affairs data presented in Rajya Sabha. Saudi Arabia led with over 11,000 deportations, primarily low-skilled workers violating visa or labor rules in Gulf nations. The US deported around 3,800—the highest in five years—due to stricter Trump-era enforcement on visas and overstays. Myanmar and Cambodia cases often involved cyber slavery traps, while student deportations peaked in the UK.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக