திங்கள், 5 ஜனவரி, 2026

திராவிட தலைவர் எல் கணேசனுக்கு வைகோ செய்த துரோகங்கள்

No photo description available.

 வல்லம் பசீர்  :   பெரிய கருப்பு (வைகோ)  நீலிக்கண்ணீர் வடிகிறது .
எல்.ஜி என்ற மனிதர் இல்லாமல் போயிருந்தால் பெரிய கருப்பு (வைகோ) அரசியலில் எந்த அடையாளத்தையும் பெற்றிருக்காது . பேரறிஞர் பெருந்தகையிடம் பெரிய கருப்பை அறிமுகப்படுத்தியவர் எல்ஜி . திராவிட மாணவர் முன்னேற்ற கழகத்தில் பெரிய கருப்புக்கு (வைகோ)  துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கி அவருக்கு முகவரி தந்தவர் எல்.ஜி .  
பெரிய கருப்பு (வைகோ) முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுத்தந்தவர் எல்.ஜி .
பெரிய கருப்பு ( வைகோ) தனிக்கட்சி துவங்கி தமிழ்நாட்டு அரசியலில் நிலைபெற வேராகவும் , விழுதாகவும் இருந்தவர் எல்.ஜி . 
பெரிய கருப்பு ( வைகோ) சிறையில் இருந்த 19மாத காலம்  இயக்கத்தை கட்டிக்காத்தவர் எல்.ஜி .


2006ம் ஆண்டு திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி கலைஞரை வீழ்த்த ஜெயலலிதா அம்மையாரோடு கூட்டு சேர்ந்த சகுனித்தனத்திற்கு பெரிய கருப்பால் ( வைகோ) அவப்பெயருக்கு ஆளானவர் எல்.ஜி . 
பெரிய கருப்பு (வைகோ) எல்.ஜியை எல்லாவகையிலும் பயன்ப்படுத்தி இலாபமடைந்தது .
இவையெல்லாவற்றையும் பெரிய கருப்புக்காக செய்த தியாகவேங்கை எல்.ஜியை ஒன்றிய அமைச்சராக்க மறுத்தவர் பெரிய கருப்பு ( வைகோ). 
ஒன்றிய அமைச்சராக்க எல்லா வாய்ப்பும் இருந்தும் கலைஞரின் பெயரைச் சொல்லி தனது சகுனி வேலையை செவ்வனே செய்தவர் பெரிய கருப்பு (வைகோ) . 
அந்நேரத்தில் கலைஞர் மீது அபாண்ட பழியை சுமத்திய பெரிய கருப்பு (வைகோ) "கலைஞர் மதிமுகவையும்  கணக்குக்காட்டி ஒன்றிய அமைச்சர் பதவிகளை பெற்றிருக்கிறார்" என நாகூசாமல் பேசியதை எவரும் மறக்கமுடியாது .
அண்ணாவின் பாசறையில் மொழிப்போரை முன்னின்று நடத்தியவரை 2007ம் ஆண்டில் கலைஞர் பின்னின்று இயக்குகிறார் என கொச்சைப்படுத்தியவர் பெரிய கருப்பு (வைகோ). 
அன்று பெரிய கருப்பு ( வைகோ) , 
தஞ்சையில் எல்ஜிக்கு நடத்தப்பட்ட பிறந்தநாள் விழாவுக்கு கலைஞரை வரவிடாமல் தடுத்து அவருக்கு பதிலாக பேராசிரியர் வந்து வாழ்த்தி சென்றார். 
இன்று தன்னை அடையாளம் கண்டு ஆளாக்கி வளர்த்தவருக்கு மாலை வைக்க கூட பெரிய கருப்புக்கு (வைகோவுக்கு) மனமில்லை.
 நடைபயணம் நடுவே வந்து செல்ல அதிகபட்சம் இரண்டு மணிநேரம் தான் ஆனால் அதை செய்யாமல் பெரிய கருப்பு ( வைகோ)தவிர்த்துவிட்டது .

ஆயிரம் அலுவல்களுக்கு நடுவே அரசை தலைமை தாங்கி நடத்துகிற தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் ஓடோடி தஞ்சைக்கு வந்து அஞ்சலி செல்லுகிறார்.
பெரிய கருப்பு (வைகோ) புறக்கணித்து எல்ஜியின் புகழ் மங்கிவிடாது . 
எல்.ஜி , அண்ணன்  திருச்சி சிவா போன்ற ஆயிரம் போர்வாள்களை உருவாக்கியவர் , அவர் பாசறையில் தப்பி வந்த ஒன்று அட்டை கத்தியாகிவிட்டது .
இதையெல்லாம் சொல்லக் கூடாது என்றே நினைத்தேன் ஆனால் பெரிய கருப்பு ( வைகோ) நேற்று எல்ஜி படத்திற்கு மாலை அணிவித்த நாடகத்தை பார்த்ததும் இவற்றை எழுத தோன்றியது . 
எல்.ஜி என்னும் திராவிட இயக்கத்தின் தன்னேரில்லா தளகர்த்தருக்கு கண்ணீர் அஞ்சலி! 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

டேய் படிப்பறிவில்லாத முண்டம்
தமிழ் நாட்டில் இருந்து தமிழ் பேசும் பிற மொழியை சேர்ந்த வேசி குலத்தவர்கள்தான் திராவிடர்கள் . உதாரணம் கருணாநிதி, அண்ணா , பெரியார் , வீரமணி
திராவிடன் வேற தமிழன் வேற