புதன், 2 நவம்பர், 2022

வெளிநாட்டு குடிவரவாளர்களுக்கு எதிரான புதிய பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ( indian origin)

புதிய பக்கா இந்து பார்ப்பன பிரதமர் ரிஷி சுணக்கின் முதல் பேச்சே இவர் யாருக்கானவர் என்பதை காட்டுகிறது..
இவரின் தாத்தா ராம்தாஸ் சுனக் அங்கு வேதிக் சொசைட்டியை தொடக்கியவராம்  Vedic Society Hindu Temple in Southampton in 1971.
அது மட்டுமல்ல அதற்காக ஒரு கோயிலே கட்டியவராம்
இவரரே  ஒரு இந்திய குடிவரவு .. ஆனால் புதிய குடிவரவாளர்களை எதிர்க்கட்சி அளவுக்கணக்கிலாமல் வருவதை ஆதரிக்கிறது என்று கூறி பிரித்தானிய மண்ணின் மைந்தர்களின் மனதில் துவேஷ விதையை விதைக்கிறார்.. இவர் பதவிக்கு தெரிவான காரணங்களை தேடுங்கள்  
ஒரு கருப்புத்தோல்  என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு இவர் புகழ் பாடினால் .
எதிர்காலத்தில் இவரால் விளையப்போகும் விளைவுகளுக்கு என்ன பதில் கூறப்போகிறோம்?
இவர்பிரதமரானதும் நாடாளுமன்றத்தில்  பேசியதில் ஒரு சிறு துளி    
"குற்றவாளிகளை ஒழித்து கட்டுவதில் கவனத்தை செலுத்துவோம்
எல்லைகளை பாதுகாப்போம்
எதிர்க்கட்சி குற்றங்களை கையாள்வதில்  மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது
எதிர்க்கட்சி வெளிநாட்டு குடிவரவாளர்கள் மீது மென்மையான அணுகுமுறையை கொண்டிருக்கிறது
எதிர்க்கட்சி வெளிநாட்டு குடிவரவளர்கள் கணக்கிலடங்காமல் பிரிட்டனுக்கு வருவதை ஆதரிக்கிறது"

கருத்துகள் இல்லை: