சுமார் 21 ஆண்டுக்காலமாக தனது கட்சியின் முத்திரையில் காங்கிரஸ் எனும் வார்த்தையையும் சேர்த்து பயன்படுத்திவந்த மம்தா பானர்ஜி, கட்சி முத்திரையிலிருந்து தற்போது முதல் முறையாக அதை நீக்கியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் மற்றும் முகநூல் ஆகியவற்றிலும் காங்கிரஸ் சொல் நீக்கப்பட்டிருக்கிறது. புதிய லோகோவில் பச்சை நிறத்தில் இரட்டை மலர்கள் மற்றும் நீல பின்னணியுடன் திரிணாமுல் என்ற பெயர் பச்சை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. இப்போது, ஒரு வாரத்திற்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எனும் பெயரில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மம்தா பானர்ஜி கட்சி பெயரில் இருந்து காங்கிரஸ் என்ற வார்த்தையை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறு, 24 மார்ச், 2019
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இனி வெறும் திரிணாமுல் மட்டுமே .. காங்கிரஸ் நீக்கம்! மம்தா பானர்ஜி அதிரடி
சுமார் 21 ஆண்டுக்காலமாக தனது கட்சியின் முத்திரையில் காங்கிரஸ் எனும் வார்த்தையையும் சேர்த்து பயன்படுத்திவந்த மம்தா பானர்ஜி, கட்சி முத்திரையிலிருந்து தற்போது முதல் முறையாக அதை நீக்கியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் மற்றும் முகநூல் ஆகியவற்றிலும் காங்கிரஸ் சொல் நீக்கப்பட்டிருக்கிறது. புதிய லோகோவில் பச்சை நிறத்தில் இரட்டை மலர்கள் மற்றும் நீல பின்னணியுடன் திரிணாமுல் என்ற பெயர் பச்சை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. இப்போது, ஒரு வாரத்திற்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எனும் பெயரில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மம்தா பானர்ஜி கட்சி பெயரில் இருந்து காங்கிரஸ் என்ற வார்த்தையை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக