வியாழன், 7 நவம்பர், 2024

300 தொகுதிகளை கைப்பற்ற போகும் டிரம்ப்.. கிளீன் ஸ்வீப்.. ஸ்விங் மாகாணங்களில் சாதனை

 tamil.oneindia.com - Shyamsundar  :  நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு அரசியலில் மிக முக்கியமான வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார். அரிசோனா , நவேடா ஆகிய இரண்டு மாகாணங்களில் மட்டும் இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபராகி உள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான தொகுதிகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.
தற்போது வரை 295 தொகுதிகளை வென்றுள்ளார்.
 இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது.
கமலா ஹாரிஸ் 224 தொகுதிகளை வென்றுள்ளார்.


us presidential election 2024 kamala harris donald trump 2024
டிரம்ப்புக்கு தொலைபேசியில் மோடி வாழ்த்து..பதிலுக்கு அவர் சொன்னதை பாருங்க..இதுதான் உண்மையான நட்பாம்

மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அவரின் வருகை உலக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரிசோனா , நவேடா ஆகிய இரண்டு மாகாணங்களில் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் டிரம்ப் 300 எலக்ட்ரல் வாக்குகள் தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்த இரண்டு மாகாணங்களிலும் டிரம்ப்தான் முன்னிலை வகிக்கிறார்.

டிரம்ப் வெற்றி பெற்ற மாகாணங்கள்:

1. மொண்டோனா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 4 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்
டிரம்ப் ரிட்டர்ன்ஸ்! இந்தியாவிற்கு இது முக்கிய காலம்.. அமெரிக்க அதிபர் ரிசல்ட்.. மாறும் 10 விஷயங்கள்

2. வடக்கு டகோடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 3 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

3. இண்டியானா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 11 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

4. டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 40 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்
எலான் மஸ்க், பில் கேட்ஸ் & சுந்தர் பிச்சை! டெக் தொழிலதிபர்கள் ஆதரவு யாருக்கு? டிரம்ப் vs கமலா ஹாரிஸ்

5. கெண்டகி மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார் : 8 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

6. ஒக்லஹோமா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 7 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

7. மிஸிஸிப்பி மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

8. அலபாமா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 9 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

9. ஃப்ளோரிடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 30 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

10. தெற்கு கரோலினா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 9 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

11. டென்னிஸி மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 11 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

12. வெஸ்ட் விர்ஜினியாவில் டொனால்ட் டிரம்ப் வெற்றி: 4 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

13. அர்கான்சாஸ் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

14. இடாஹோ மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 4 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

15. வியோமிங் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 3 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

16. தெற்கு டகோடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 3 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

17. யுடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

18. நெப்ராஸ்கா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 5 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

19. கான்சாஸ் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

20. ஐயோவா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

21. ஜார்ஜியா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 16 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்.

22. மிசோரி மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

23. ஆர்கன்சாஸ் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 6 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

24. லூயிசியானா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 8 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

25. ஒஹையோ மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 17 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

26. பென்சில்வேனியா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 19 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

27. வடக்கு கரோலினா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 16 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

28. தெற்கு கரோலினா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 9 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்.

29. அலாஸ்காவில்மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 3 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

30. நவேடாவில் டிரம்ப் முன்னிலை

31. விஸ்கான்சின் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

32. மிச்சிகன் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 15 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

33. அரிஸோனாவில் டிரம்ப் முன்னிலை

கமலா ஹாரிஸ் வெற்றிபெற்ற இடங்கள்:
us presidential election 2024 kamala harris donald trump 2024

1. கலிபோர்னியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 54 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

2. வெர்மோன்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 3 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

3. கனெடிக்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 7 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

4. மாசசூசெட்ஸ் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 11 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

5. மேரிலேண்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

6. நியூ ஜெர்ஸி மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 14 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

7. நியூயார்க் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 28 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

8. டெல்வேர் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 3 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

9. இல்லினாய்ஸ் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 19 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

10. வாஷிங்க்டன் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 12 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

11. ஒரேகான் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 8 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

12. நியூ மெக்சிகோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 5 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

13. கொலராடோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

14. ஹவாய் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 4 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

15. விர்ஜினியா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 13 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

16. மெயின் மாகாணத்தில் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 4 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

17. மின்னசோட்டா மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார் : 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

ஸ்விங் மாகாணங்கள்:
us presidential election 2024 kamala harris donald trump 2024

அரிசோனாவில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்

நவேடா டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்

மிச்சிகன் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 15 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

விஸ்கான்சின் மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 10 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

பென்சில்வேனியா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 19 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

வடக்கு கரோலினா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 16 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்

ஜார்ஜியா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்: 16 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றார்.

ஸ்விங் ஸ்டேட்ஸ்: அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவேடா, வட கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்கள் ஆகும். 7ல் மொத்தமாக 5 மாகாணங்களில் வென்றுள்ளார். 2ல் முன்னிலை வகிக்கிறார். மொத்தமாக இதன் மூலம் ஸ்விங் மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றி உள்ளார்.

 அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும். அமெரிக்காவில் மொத்தம் 538 தொகுதிகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு மாகாணத்திற்கு சம பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.. கறுப்பின மக்கள்.. அமெரிக்காவின் அனைத்து மாகாணத்திலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.. மக்கள் தொகை அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவை தீர்மானிக்க கூடாது என்பதற்காக இந்த எலக்ட்ரல் வாக்கு முறை அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: