மின்னம்பலம் -Selvam : தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து தான் பேசிய இழிவான கருத்துகளை நடிகை கஸ்தூரி திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக டெல்லி மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று (நவம்பர் 4) வலியுறுத்தி உள்ளார்.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நேற்று (நவம்பர் 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, “மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள்தான் தெலுங்கர்கள். எப்போதோ இங்கு வந்த அய்யர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? ” என்று பேசியிருந்தார்.
நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஊடகங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பாஜகவின் டெல்லி மேலிட இணை பொறுப்பாளரான சுதாகர் ரெட்டி கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “நடிகை கஸ்தூரியின் இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். அவர் தன்னுடைய கருத்தை திரும்பப் பெற வேண்டும். தனது கருத்துகளுக்காக கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
முன்பு சென்னை மாகாணத்துடன்தான் தெலுங்கு பேசும் பகுதிகளும் இணைந்து இருந்தன. அப்போது முதல் அண்ணன் தம்பியாக தமிழர்களும் தெலுங்கு மொழி பேசும் மக்களும் பழகி வருகின்றனர். கஸ்தூரியின் இத்தகைய பேச்சுகள் இருவர் இடையேயான ஒற்றுமையை பாதிக்கும்” என்று சுதாகர் ரெட்டி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக