திங்கள், 7 நவம்பர், 2016

அறக்கட்டளையில் மகனுக்கு பதவி அழகிரி கோரிக்கை; ஸ்டாலின் எதிர்ப்பு.. தினமலர்

முரசொலி அறக்கட்டளையில், தன் மகன் தயாநிதிக்கு பதவி வழங்க வேண்டும்' என, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் முறையிட்டுள் ளார். இதற்கு, ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. >இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:;உடல்நலம் பாதிக்கப்பட்டதால், தி.மு.க., < தலைவர் கருணாநிதி, சில நாட்களாக, கோபாலபுரம் வீட்டில் தங்கி சிகிச்சை பெறுகிறார். அவரை, சில நாட்களுக்குள், இரு முறை அழகிரியும், அவரது மனைவி காந்தி, மகன் தயாநிதியும் சந்தித்து பேசியுள்ளனர். < அப்போது,இடைத்தேர்தலுக்கு பின், தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை வழங்குவதாக, அழகிரியிடம் கருணாநிதி கூறியுள்ளார். அதற்கு அழகிரி, 'எனக்கு கட்சியில் பதவி அளிப்பது இருக்கட்டும்; முரசொலி அறக்கட்டளை நிர்வாகி யாக வசதியாக, என் மகன் தயாநிதிக்கு, தி.மு.க., அறக்கட்டளையின் உறுப்பினர் பதவி அளிக்க வேண்டும்' என, கோரியுள்ளார்.


இந்த தகவல், ஸ்டாலினுக்கு எட்டியதும்,நேற்று முன்தினம் இரவு, கோபாலபுரம் வீட்டிற்கு சென்ற அவர், 'சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைய பாடுபட்டவர் அழகிரி. கட்சிக்கு எதிராக செயல்படும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக் கும் எந்த பதவியும் வழங்க முடியாது; அவர்களை, கட்சியில் இணைக்க விட மாட்டேன்' என, கருணாநிதியிடம் ஆவேசமாக கூறியுள்ளார்.

அவரை சமாதானப்படுத்த, கருணாநிதியின் மகள் செல்வி முற்பட்டுள்ளார். அது, பலன் அளிக்காததால், குடும்பத்தினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: