திங்கள், 7 நவம்பர், 2016

பெனாசிர் மகன் பிலாவல் கராச்சி சிவன் கோவிலில் பாலபிஷேகம் செய்து தீபாவளி கொண்டாடினார்


கராச்சி: நம் ஊரில் அரசியல்வாதிகள் ரம்ஜான் பண்டிகைக்ககு இப்தார் விருந்து
அளிப்பது போல பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலவால் பூட்டோ, கராச்சியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டதுடன், அங்குள்ள இந்துக்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். இந்தியாவில் உள்ள இந்து அரசியல்வாதிகள் மதச்சார்பின்மையை வெளிப்படுத்தும் விதமாக மசூதிக்கு சென்று தொப்பி அணிந்து தொழுகை செய்வார்கள். இப்தார் விருந்து கொடுப்பார்கள். சலாம் சுகாரி கூட்டத்தில் பிரம்மாண்டமாக தீபாவளியை கொண்டாட உள்ளதாக பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலவால் பூட்டோ சர்தாரி அறிவித்திருந்தார். ஆனால் கட்டாவில் போலீஸ் பயிற்சி கல்லூரியில் நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அக்டோபர் 31ம் தேதி கராச்சியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றார்பிலவால் பூட்டோ. அங்கு நடைபெற்ற வழிபாடுகள் ஆராதனைகளில் பங்கேற்ற அவர் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் பூஜை செய்து வழிபட்டார். அங்கு இஸ்லாமியர்கள் சிலர் மற்றும் இந்துக்களுடன் இணைந்து பில்வால் தீபாவளி கொண்டாடினார். இந்த பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கொண்டாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிலவால், பாகிஸ்தானில் இஸ்லாமியர்களை போன்றே சிறுபான்மையினருக்கும் முழுமையான வழிபாட்டு சுதந்திரம் உள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் மக்கள் அமைதி மற்றும் ஜனநாயகத்துடன் உள்ளனர். இங்கு பயங்கரவாதத்தை வெற்றி பெற விடமாட்டோம். பாகிஸ்தான் அரசு அராஜக போராட்டக்காரர்களின் கைப்பாவையாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். சிவன் கோயிலில் தீபாவளியை கொண்டாடிய பில்வால், தீபாவளியை எளிமையாக கொண்டாடி நல்லதொரு தகவலை அனைவருக்கும் தந்துள்ளனர் என இந்துக்களை வெகுவாக பாராட்டினார். tamiloneindia.com

கருத்துகள் இல்லை: