ஞாயிறு, 6 நவம்பர், 2016

சொத்து குவிப்பு .. 5 ஆண்டுகள் சிறை .. அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் இயங்கி வந்த அண்ணா பல்கலைக்
கழகத்தில் கடந்த 2007- 2010-ம் ஆண்டு வரை துணை வேந்தராக ராதாகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்கலைக் கழகத்திற்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக ரூ.1 கோடியே 30 லட்சம் சொத்து சேர்த்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில், பல்கலைகழகத்திற்கு நாற்காலிகள், மேஜைகள் வாங்க காண்டிராக்டர் செந்தில்குமார் என்பவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதை லஞ்ச ஒழிப்பு போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து கவர்னரின் அனுமதி பெற்று துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராதா கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதுதொடர்பான வழக்கு கோவை ஊழல் தடுப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி மதுரசேகரன் குற்றம் சாட்டப்பட்ட கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.  மாலைமலர்.காம்


கருத்துகள் இல்லை: