திங்கள், 11 நவம்பர், 2024

ராஜீவ் கொலை - உண்மை குற்றவாளிகள் பட்டியல் : பிரபாகரன் முருகன் நளினி, பேரறிவாளன் சிவராசன் பாக்கியநாதன்சின்ன சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்

May be a graphic of 2 people and text
Vimalaadhithan Mani  :  ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றி புதிதாக வெளியாகி இருக்கும் Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassins என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.
இது ஏற்கெனவே ராஜீவ் கொலை  வழக்கு பற்றிய பல புத்தகங்களை படித்திருக்கும் எனக்கு இந்த வழக்கில் நளினி, பேரறிவாளன் போன்றவர்களின் பங்களிப்பு என்ன என்பதை பற்றிய மேலும் பல உண்மைகளை உணர்த்தி இருக்கிறது.
இந்த புத்தகம் சொல்லி இருக்கும் உண்மைகள் பின்வருமாறு :
நளினியின் சகோதரன் பாக்கியநாதன்தான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளி.
தணு, சுபா என்ற இரண்டு தற்கொலை படை போராளிகளையும் அவர்களை வழிநடத்திய முருகனையும்,
அவர்களுடைய கொலைபாதக திட்டத்தையும் அறிந்தேதான் அவர்களை ஆதரித்து,
தன்னுடைய வீட்டில் தங்க வைத்து இந்த கொலைக்கான திட்டமிடல் மற்றும் கொலை நிறைவேற்றம் வரை உடன் பயணித்து இருக்கிறார்
இன்று நான் அப்பாவி என்று கூக்குரலிடும் நளினி.
வெறும் பேட்டரி மட்டுமே வாங்கி கொடுத்த அப்பாவி என்று தன்னை கூறிக்கொள்ளும் பேரறிவாளன்தான் ராஜிவ் காந்தியை கொள்ள தணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டின் முதல் மாடலை தன்னுடைய எலக்ட்ரானிக்ஸ் மூளையை கொண்டு டிசைன் செய்து கொடுத்து இருக்கிறார்.

அதுவுமில்லாமல் இலங்கைக்கு பயணித்து, அங்கே சில மாதங்கள் தங்கி பிரபாகரனை சந்தித்து விடுதலைப் புலிகளுக்கான பயிற்சியும் எடுத்து இருக்கிறார் பேரறிவாளன். சிவராசனின் இந்த கொலைபாதக திட்டத்தை நன்கு அறிந்தே பேரறிவாளனும்  நளினியை போலவே அவர்களுடன் பயணித்து இருக்கிறார்.
விசாரணையின் போதும் கூட நளினியும் முருகனும் ஆரம்பத்தில் ஆணவமாக அலட்சியமாகவே விசாரணையை எதிர்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் மிரட்டலாக கேள்வி கேட்ட அதிகாரிகளை கொலை செய்துவிடுவேன் என்று  ஒரு சரியான கிரிமினல் பேசுவது போல பேசி உதார் காட்டி இருக்கிறார் முருகன். விசாரணை அதிகாரிகள் கடுமை காட்ட ஆரம்பித்த உடன் வழிக்கு வந்து இருக்கிறார்கள். விடுதலை புலிகளின் மிக பெரும் நெட்ஒர்க்கை தமிழ்நாட்டில் வேரூன்ற செய்வதற்கான அனைத்து உதவிகளையும் தான் காதலித்து கைப்பிடித்த முருகனுக்காக தெரிந்தேதான் செய்து இருக்கிறார்  இன்று அப்பாவி வேடம் போடும் நளினி. இவர்களுடன் சேர்ந்து விடுதலை ஆகி இருக்கும் சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் அனைவருக்கும் இந்த குற்றத்தில் சரி பங்கு உண்டு.
ஆனால் இன்று முழு நேர அரசியல்வாதிகளாக மாறி அதிகாரத்தை சுவைக்க துடிக்கும் போலி தமிழ் தேசிய உணர்வாளர்கள் மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் இந்த குற்றவாளிகளைத்தான் உத்தமர்கள், அப்பாவிகள் என்று கூக்குரல் எழுப்பி இன்று அவர்களுடைய விடுதலையை கொண்டாடி மகிழ்கின்றனர். இவர்கள் எவருமே இந்த கொலை வழக்கின் உண்மைகளை அறியாத வெற்று விளம்பர அரசியல்வாதிகள். இந்த கொலையாளிகளை அரசியல் விளம்பரம் மற்றும் புலம்பெயர் இலங்கை தமிழர்களிடமிருந்து வரும் வருமானத்துக்காக ஆதரிக்கும் சீமான் போன்றவர்களும் இந்த கொலையாளிகளுக்கு சமமாக கருதப்பட வேண்டிய குற்றவாளிகளே. இந்த கொலையாளிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் பாவிகள் என்று எவரையும் ராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது .
 ராஜீவ்  காந்தி படுகொலை பற்றிய உண்மைகளை அறிய பின்வரும் புத்தகங்களை படியுங்கள் நண்பர்களே. உங்களுக்கே உண்மை விளங்கும்.
1. ராஜீவ் கொலை வழக்கு மர்மம் விலகும் நேரம் - ரகோத்தமன்
2. Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassins - By Anirudhya Mitra
3. Rajiv Gandhi Assassination: The Investigation Paperback – By D.R. Kaarthikeyan
4. Assassination of Rajiv Gandhi: An Inside Job? - By Ahmad Faraz
5. The assassination of Rajiv Gandhi - By Neena Gopal
6. Rajiv Gandhi's Assassination: The Mystery Unfolds - By Ramesh Dalal

கருத்துகள் இல்லை: