tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
kasturi tamil actress hyderabad
இதில் நடிகை கஸ்தூரி பங்கேற்று ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.
அதாவது, "300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.. எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்?'' என்று பேசியிருந்தார்.
நடிகை கஸ்தூரி டெல்லியில் தஞ்சம்? யார் வீட்டில் தங்கியுள்ளார்? விரைந்த தமிழக தனிப்படை! இன்று கைது?
கஸ்தூரியின் இந்த கருத்து தான் சர்ச்சையானது. அவர் தெலுங்கு பேசும் மக்களை இழிவுப்படுத்திவிட்டதாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. சென்னை, மதுரை, திருச்சி உள்பட பல இடங்களில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னை எழும்பூர் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி கஸ்தூரிக்கு சம்மன் வழங்க சென்றபோது அவர் தலைமைறைவானது தெரியவந்தது.
இதையடுத்து கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கஸ்தூரியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே தான் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவரது மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் கஸ்தூரிக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.
கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல உள்ளது.. மோசமான முன்மாதிரி ஆகிவிடும்.. நீதிமன்றம் குட்டு
இதனால் கஸ்தூரி விரைவில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் இன்று கஸ்தூரியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக