செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ஜெயந்திக்கு தமிழக அரசு கல்பனா சாவ்லா விருது ! சாதீயத்தை தாண்டி பிணம் எரிக்கும் பணியில் உள்ள...

பிணம் எரிக்கும் பணி செய்யும் பார்ப்பனப் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது,மதல்வர் வழங்கினார்.
முதல்வர் என்னிடம் பேசும்போது, 'நீங்கள் பிராமணப் பெண்ணா?' எனக் கேட்டார்; 'ஆமாம்' என்றேன். உடனே முதல்வர், 'இவ்விருதை உங்களுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறேன்' என்றார். முதல்வருடன் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு ஜெயந்தி கூறினார்.
இந்த செய்தியில் மாறுபட்டக் கருத்து சிலருக்கு இருக்கக் கூடும்,ஆனால் இது வரவேற்கப்பட வேண்டியதே.
பார்ப்பனர் இருவர் மாடு பூட்டி உழவுத் தொழில் செய்தக் காரணத்துக்காகவே சாதி விலக்கு செய்யப்பட்ட மண் இது,இந்த மண்ணில் பார்ப்பனப் பெண் ஒருவர் இந்தத் தொழிலை செய்கிறார் என்றால் அவர் துணிச்சலைப் பாராட்ட வேண்டும்,ஜெயந்தி பார்ப்பனப் பெண் என்று தெரிந்தும் அய்யோ ஒரு பார்ப்பனப் பெண் மயானத் தொழில் செய்கிறாரா என்று அதை மூடி மறைக்காமல் அவருக்கு விருது வழங்கியிருப்பது பாராட்டத் தக்கது,
அதிலும் நாடு முழுக்க துப்புரவுத் தொழில்,மயான வேலை போன்றவற்றில் இருந்து தலித்துகளை விடுவிக்க வேண்டும் என்ற குரல் பரவலாக ஒலிக்கத் துவங்கியிருக்கும் நிலையில் ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது தலித்துகளின் குரலுக்கு வலிமை சேர்ப்பதாகவே இருக்கும்.  முகநூல் பதிவு Rajesh Dee

கருத்துகள் இல்லை: