வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

கைதான பச்சமுத்துவுக்கு மருத்துவ பரிசோதனை ( படங்கள்)

வேந்தர் மூவிஸ் மதன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக மதன் மீது புகார்கள் குவிந்தன. இந்த புகாரின் அடிப்படையில் மதன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த மோசடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பச்சமுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.


மாலை பச்சமுத்து விசாரணைக்காக நேரில் ஆஜரானார். சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டார். இரவிலும் அவரிடம் விசாரணை நீடித்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் சென்னை ராஜீவ்காந்தி பொது அரசு மருத்துவமனைக்கு இன்று மதியம் 3.30 மணிக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைகள் முடிந்து மாலை 6.30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு, சைதாப்பேட்டை மாஜிஸ் திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். படங்கள் : அசோக்
  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: