![]() |
மின்னம்பலம் : 1990இல் இந்தியாவும் சீனாவும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்தன. தனிநபர் வருமானங்கள் முறையே $368, $318 ஆக இருந்தன.
1970களின் பின்பகுதியில் சீனா தாராளமயமாக்கலைத் தொடங்கினாலும் வளர்ச்சி உச்ச வேகத்தை அடையாமல் இருந்தது;
ஆனால் அடுத்த 30 ஆண்டுகள் சீன யுகமாக விளங்கின: உலகளாவிய உற்பத்தி, வர்த்தகம், கரன்சி கையிருப்பு ஆகியவை மூலம் உலகம் இதுவரை கண்டிராத செல்வத்தை அந்நாடு குவித்தது.
சீனாவின் தனிநபர் வருமானம் $12614 – தற்போதைய இந்தியாவின் தனிநபர் வருமானமான $2480-ஐ விட ஏறத்தாழ 5 மடங்கு – என விஸ்வரூபமெடுத்தது.
விவரமறிந்த கொள்கைகளும் சிறந்த முறையில் தன்னை முன்னிறுத்தும் திறனும் சில தலைமுறைகளுக்கான ஆச்சரிய வளர்ச்சியையும் செழுமையையும் இந்தியாவுக்குத் தரவல்ல ஒரு யுகத்தில் நாம் நுழைந்துகொண்டிருக்கிறோம். வயதானோர் அதிகரித்துவிட்ட மக்கள்தொகை கொண்டுள்ள சீனாவின் பங்கு உலகப் பொருளாதாரத்தில் குறைந்துவருவதாலும் உலக முதலீட்டாளர்களும் வர்த்தகக் கூட்டாளிகளும் சீன ‘அபாயத்தை’ தீவிரமாகக் குறைத்துவருவதாலும், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய இஞ்சினாக இந்தியா ஆகிவிட்டது.
உலகின் மிகப்பெரிய இளைஞர் படை, உலகப் பொருளாதார ஒருங்கிணைப்புத் திறன், உள்நாட்டு நுகர்வோர் தேவையை அதிகரிக்கும் பலவித விளைவுகளுக்கு வழிவகுக்கும் புவியியல் அமைவிடம் என இதற்குத் தேவையான அனைத்து உட்கூறுகளும் நம்மிடம் உள்ளன. நீடித்த இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைத் தரும் தனிமனித உற்பத்தியை அதிகரிக்க உலகச் சந்தைக்கான திறன்களில் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சி தர வேண்டும். தமிழ்நாடு போல சாதித்துவரும் மாநிலங்களிடமிருந்து பாடம் கற்பதே நாடு முழுவதிலும் இதைச் செய்வதற்கான சிறந்த வழி; சரியாக செயல்படாத மாநிலங்களில் இம்மாநிலங்களின் கொள்கைகளையும் நடைமுறைகளையும் அமலாக்கினால் தேசிய சராசரி மேம்படும்.
அரசியல் ஆசைகளால் ஏற்படும் அபாயம்

சிறந்த முன்மாதிரியைப் பிற இடங்களில் அமல்படுத்துவதற்குப் பதிலாக நமது ஒன்றிய அரசானது வளர்ச்சி பெற்ற தென்னிந்தியாவின் மீது தனது ஒற்றை அடையாளத் திட்டத்தைத் திணிப்பதில் தீவிரமாக உள்ளது ஏன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை; தோல்வி அடைந்த மாடல்கள் வெற்றிகரமான மாநிலங்களின் மீது திணிக்கப்பட்டால் தேசிய சராசரி குறையும் அபாயம் உள்ளது. மாறாக, அதிக மக்கள்தொகையும் அதிக வளங்களும் கொண்ட, தேசிய சராசரியைக் காட்டிலும் பின்தங்கியுள்ள வடமாநிலங்களில் இளைஞர் முன்னேற்றத்தை மேம்படுத்துவதை முன்னுரிமைப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் மேம்படுத்துவதற்குப் பதிலாக 140 கோடி மக்களின் அடையாளங்களை ‘ஒரு நாடு, ஒரு அடையாளம்’ என்ற தவறான கோட்பாட்டுக்குள் அடைக்கும் தற்காலிக அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் தவறான திசையில் கவனம் செலுத்தப்படுகிறது. இப்படி அடிப்படை நிர்வாகப் பொறுப்பை மீறி அரசியல் ஆசைகளை முன்னுரிமைப்படுத்தினால் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் அபாயமும் உருவாகும்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல…
மீண்டும் சொல்கிறேன். சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளை மேம்படுத்துவதே ஒன்றிய அரசின் உச்சகட்ட முன்னுரிமையாக இருக்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்துடன் ஒப்பிட்டால் இத்துறைகளில் பின்தங்கியுள்ள, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள்மீது கவனம் செலுத்த வேண்டும். போதிய முன்னேற்றம் கண்டிராத உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகம் பீற்றிக்கொள்ளப்படும் ‘இரட்டை இஞ்ஜின்’ அரசுகளால் நிர்வகிக்கப்படுவதால் இந்த முன்னுரிமைப்படுத்தலைப் புறக்கணிப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்தியாவின் வருங்காலம் மிகவும் அபாரமாக இருக்க வேண்டுமெனில் அனைத்து மாநிலக் குழந்தைகளும் கல்வியில் செழித்து விளங்க வேண்டும். பல ஆண்டுகளாகப் பல விதமான ஆதரவுகளைத் தொடர்ந்து வழங்கியும் போதிய பலன்கள் இல்லாத இப்பிராந்தியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனத் தமிழ்நாடு விரும்புகிறது.
other parts of India learn from Tamil Nadu
இம்மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலுள்ள ஏற்றத்தாழ்வு வெறும் பொருளாதார ரீதியானது மட்டுமல்ல; சமூக ரீதியானதும்கூட. தமிழ்நாட்டிற்குக் கட்டளை இடுவதைவிட மேம்பட்ட சுகாதார வசதிகளை உருவாக்குதல், பெண்கல்வி உள்ளிட்ட வசதிகளைப் பரப்புதல், பள்ளியை விட்டு நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், திறன்வளர்ச்சியை அதிகரித்தல், உயர்கல்விக்கு ஊக்கமளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து இடைவெளிகளை அடைத்தல் ஆகிய நடவடிக்கைகள் ஒன்றிய அரசுக்குப் பெருமை தரும்.
மாறாக, அடக்குமுறைக்கான வழியை ஒன்றிய அரசு தேர்ந்தெடுத்துள்ளது: மாநிலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியுதவியைத் தராமல் தடைபோட்டுப் பணியவைக்க முயல்கிறது. தனது நிர்வாகச் சீர்கேட்டிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஒன்றிய அரசு இதைச் செய்கிறதா? இந்த அணுகுமுறை சுயதோல்விக்கு வழிவகுக்கும். விகிதாசாரப்படி அமையாத தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கையை நிராகரித்தல், கூட்டாட்சிக் கட்டமைப்பில் மாநில உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப்படுவதை எதிர்த்தல் என எதிர்ப்பின் முன்னணியில் ஏன் தமிழ்நாடு இருக்கிறது என்ற உண்மை விரிவான சமூக-பொருளாதார அணுகுமுறையைப் பின்பற்றும் எவருக்கும் புரியும்.
தெளிவற்ற போக்கு other parts of India learn from Tamil Nadu
other parts of India learn from Tamil Nadu
நியாயமான பிரதிநிதித்துவத்தின் ஆன்மாவைக் குலைக்கும் தொகுதி மறுசீரமைப்புச் செயல்பாடு மிகவும் வருத்தத்திற்குரியது. ‘பிரதிநிதித்துவம் இன்றி வரி இல்லை’ என்ற கோட்பாடு வசதியாக மறக்கப்பட்டுவிட்டது. விகிதாச்சார ரீதியாக தேசியக் கருவூலத்துக்கு அதிக வரிகளைச் செலுத்தியும், நாடாளுமன்றத்தில் மாநிலத்தின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் குறையக்கூடிய சாத்தியக்கூறைத் தமிழ்நாடு எதிர்நோக்கியுள்ளது. பொறுப்பான தேசியக் கொள்கையின்படி பல தலைமுறைகளுக்கு முன்பே மக்கள்தொகைக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை வெற்றிகரமாக அமல்படுத்திய தமிழ்நாடு, இப்போது அதற்காகத் தண்டனை பெறும் நிலையில் உள்ளது. இதனால் தேசிய விவகாரங்களில் தமிழ்நாட்டின் குரல் அழுத்தப்படுவதுடன் நல்ல நிர்வாகமும் புவிசார் பொறுப்புகளும் தண்டிக்கப்படும் நிலையும் உருவாகும். அதிக நிதியையும் செலுத்தி, குறைவாகப் பேசுமாறு தமிழ்நாட்டிடம் சொல்கிறார்கள். தன்மானமுள்ள எந்த ஜனநாயகமும் இதற்கு ஒப்புக்கொள்ளாது.
வெற்றிகரமான மாடல்களிலிருந்து கற்க ஒன்றிய அரசுக்கு விருப்பமில்லை என்பதை அதன் தெளிவற்ற போக்கு நிரூபிக்கிறது. இருமொழிக் கொள்கையை ஏற்றதால் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ள பலன்கள் தெள்ளத் தெளிவானவை. அதுபோலவே எந்த ஒரு கல்விக் கொள்கையும் (அல்லது இந்தி) அப்பட்டமாகவோ மறைமுகமாகவோ திணிக்கப்பட்டால் மாநிலத்தின் எதிர்ப்பும் தீவிரமாக இருக்கும் என்பதும் தெளிவுதான். நீதிக்கட்சியின் காலத்திலிருந்து தொடரும் திராவிடப் பாரம்பரியத்தின் அடையாளம் இதிலுள்ளது. 1930கள், 1960களிலிருந்து 1980களின் பிற்பகுதிவரை எமது எதிர்ப்பின் வெளிப்பாட்டை வரலாறு பலமுறை கண்டுள்ளது. அடக்குமுறை உத்திகளுக்குத் தமிழர்கள் என்றும் பணிவதில்லை.
மாநிலத்தின் உரிமைகள், மொழி, இளைஞர்களின் வருங்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முழுமையாக உறுதிபூண்டுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைவரின் ஆதரவையும் பெற்று மக்களின் உணர்வைப் பிரதிபலிக்க ஜனநாயக முறையில் அவர் இதை அணுகியுள்ளார். கூட்டுச் செயல்பாட்டுக் கமிட்டியை உருவாக்கி இவற்றை விவாதிக்கப் பல மாநிலங்கள் பங்குபெறும் மாநாட்டைக் கூட்டவும் அவர் கோரியுள்ளார். அரசியல் ரீதியாகத் தமிழ்நாடு தனிமைப்படுத்தப்படும் என ஒன்றிய அரசு நினைத்தால், நாட்டின் மனநிலையை அடிப்படையிலேயே அது தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்றுதான் அதற்குப் பொருள்.
other parts of India learn from Tamil Nadu

அரசியல் விவேகம் தேவைப்பட்டபோது அற்புதமான நெகிழ்ச்சியை பாஜக காட்டியது மனதைத் தொடுகிறது. எடுத்துக்காட்டாக, 2023இல் ‘இலவச கலாசாரத்தை’ எதிர்த்து மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிரான பரப்புரையைப் பிரதமர் முன்னெடுத்தார். ஆனால், அவர் கண்டனம் செய்த அதே இலவச கலாசாரத்தைத்தான் அவரது கட்சியினர் ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் அமல்படுத்திவருகிறார்கள். தனது நிலைப்பாட்டிலிருந்து மாறி, தமிழ்நாட்டின் ‘மகளிர் உரிமைத் தொகை’ மாடலை மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்களில் காப்பியடித்துள்ள பாஜக, தமிழகத்தைவிட அதிகமான மாதாந்தரத் தொகையைத் தருவதாகவும் வாக்களித்துள்ளது. காப்பியடிப்பதைவிட உண்மையான பாராட்டு எதுவும் இருக்க முடியாது!
தமிழ்நாட்டிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளும் பழக்கம் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம். பெரிய, ‘இரட்டை இஞ்சின்’ கொண்ட வட மாநிலங்களில் கல்வி, சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்குச் செயல்படுத்தப்பட வேண்டிய ஆழமான சமூக, கொள்கைச் சீர்திருத்தங்களுக்கு இது வழிவகுக்கும் என்றும் நம்புகிறோம். இந்த மாநிலங்களின் இளைஞர்கள் செழிப்படைவதைப் பொறுத்தே நமது நாட்டின் எதிர்காலம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக