மின்னம்பலம் - vanangamudi : கடந்த 6 மாதமாக ஊனமுற்றோர் உதவித்தொகை கிடைக்காததால், தங்களது மாற்றுத்திறனாளி மகனை கூடையில், தூக்கிக்கொண்டு கலெக்டரிடம் உதவிக்கேட்டு வந்த சம்பவம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள மேல் காரணை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் – காளியம்மாள் தம்பதியர். இவர்களின் மகன் கோவிந்தன் (வயது 25). disability scholarship is stop or not?
இந்த நிலையில் மாற்றுத்திறனாளியான அவரது மகனுக்கு உதவித்தொகை கடந்த ஆறு மாதமாக வரவில்லை.
இதுதொடர்பாக தகவல் பெறுவதற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, தங்களது மகனையும் மீன் கூடையில் தூக்கிக் கொண்டு நேற்று (மார்ச் 17) சென்றனர்.
அங்குள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், தங்களது மகனுக்கு ஏன் உதவித்தொகை வரவில்லை? எனக் கேட்டதற்கு, ”உங்களது மகன் இறந்து விட்டான். அதனை மறைத்து ஏமாற்றி தான் நீங்கள் பணத்தை வாங்கி இருக்கிறீர்களா?” என அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அதில், “எங்களது மகனுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்காததால், வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்துள்ளது. மாற்றுத்திறனாளி மகனை வைத்துக்கொண்டு மிகவும் வேதனைப்படுகிறோம். மிகவும் வறுமையில் வசிக்கிறோம். எனவே உடனடியாக மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் நாம் விசாரித்தபோது, “நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு உதவித்தொகை பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில் தான் மாற்றுத்திறனாளி, முதியோர், விதவை ஆகியோருக்கான உதவித்தொகை சிலருக்கு வழங்கப்படமால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக