திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய
அமைச்சராக இருந்த, தி.மு.கழகத்தைச் சேர்ந்த தம்பி ஆ. ராசா மீது சொத்துக்
குவிப்பு வழக்கு பதிவு செய்ததோடு, சுமார் 20 இடங்களில் சி.பி.ஐ. சோதனையும்
நடைபெற்றதாகவும், ஏதோ ஆவணங்களையெல்லாம் கைப்பற்றி யதாகவும் கடந்த சில
நாட்களாக ஒரு சில நாளேடுகளில் கொட்டை எழுத்துக்களில் செய்திகள் வந்து
கொண்டிருக்கின்றன.அது
பற்றி இன்றைய தினம் மாலையில் கழக அலுவலகத்தில் ராசா என்னைச் சந்தித்து,
இது பற்றிய முழு விவரங்களையும் என்னிடம் விளக்கினார். அந்த விளக்கத்தை
நாளைய தினம் உரிய அதிகாரியிடமும் செய்தியாளர்களிடமும் அவரையே விளக்கிக்
கூறுமாறு தெரிவித்திருக்கிறேன்.அவர்
என்னிடம் கூறும்போது, 13-11-2013 அன்று சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியாக
இருந்தவர் நீதிபதியின் முன்பாகவே ராஜாவின் மீதோ, அவருடைய குடும்பத்தினர்
மீதோ எந்தவிதமான சொத்துக் குவிப்பும் இல்லை என்று தெரிவித்திருப்பதாகவும்
சொன்னார்.ஸ்ரீலஸ்ரீ ஆ. ராசா அய்யர்ன்னு இருந்தாக்க ஒரு பிரஷ்னையும் இல்ல பாருங்கோள்!
ஆனால் இந்த நிலையில் சென்னை சி.பி.ஐ. அதிகாரி, ராசா மீதும், மற்றும் அவர் குடும்பத்தினர், நண்பர்கள் மீதும் புதிய ஒரு வழக்கைத் தொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது!
ஆனால் இந்த நிலையில் சென்னை சி.பி.ஐ. அதிகாரி, ராசா மீதும், மற்றும் அவர் குடும்பத்தினர், நண்பர்கள் மீதும் புதிய ஒரு வழக்கைத் தொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக