இந்தியா முழுவதும் மத்திய அரசு மது விலக்கை அமல்படுத்தினால்
தமிழகத்திலும் மதுக்கடைகளை மூடுவோம் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன்
கூறியுள்ளார். இது ஒரு காலும் நடக்காது என்பதை அறிந்தே இவ்வாறு
கூறியுள்ளார்.
ஆட்சிப் பீடத்தில் அதிமுக இருக்கும்வரை மது விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இதைவிட உறுதியாகவும் தெளிவாகவும் யாரும் சொல்லமுடியாது. கலால் துறையை கையில் வைத்திருக்கும் விசுவநாதன் முதல்வரின் வலது கரம் போன்றவர். வசூல் மன்னர். ஓ.பன்னீர்செல்வத்தை விட செல்வாக்கு மிக்கவர். ஜெயலலிதாவின் மனம் தெரியாமல் எதையும் பேசமாட்டார். மொத்த மாநிலமே மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும்போது இவ்வளவு வெளிப்படையாக ஒரு அமைச்சர் பேசுகிறார் என்றால், அதற்கு நிறைய துணிச்சல் வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மேலிடத்தின் ஆதரவும் உண்டு என்பதே.
ஒரு புறம் போராட்டம் நடந்துகொண்டிருந்தாலும், மறுபுறம் மது விற்பனை சக்கை போடு போடுகிறது. மது ஆலைகளின் உரிமை யாளர்கள் கல்லாவில் கனமாக காசு பார்க்கிறார்கள். வசூல் குவிகிறது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்வதில் முன்னணியில் உள்ள கம்பெனிகள் மிடாஸ், கோல்டன் வாட்ஸ், எம்பீ குழுமம், எஸ்என்ஜே டிஸ்டிலரீஸ், எலைட் டிஸ்டிலரீஸ் ஆகியவை.
இதில் எலைட் டிஸ்டிலரீஸ் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது. கோல்டன் வாட்ஸ் டி.ஆர்.பாலுவின் உறவினர்களால் நடத்தப்படுகிறது. எம்பீ குழுமம் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் உறவினர்களால் நடத்தப்படுகிறது. எஸ்என்ஜே டிஸ்டிலரீஸை நடத்துவது கருணாநிதி கதை வசனத்தில் பெண் சிங்கம் திரைப்படத்தை தயாரித்த ஜெயமுருகன்.
சில்லரை மது விற்பனையை கையகப்படுத்த அதிமுக அரசு எடுத்தமுடிவே மிடாஸ் நிறுவனத்தை வளம் கொழிக்கச் செய்வதற்குதான் என்கிறார் ஒரு தொழிலதிபர். 2002 அக்டோபரில் மிடாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அடுத்த ஒரு வருடத்தில் மது விற்பனையை அரசுடமை ஆக்கினார் ஜெயலலிதா.
மிடாஸ் நிறுவனத்தில் 48 சதவீத பங்குகளை வைத்திருப்பது ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் கம்பெனி. இந்த கம்பெனியில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் சசிகலாவும் இளவரசியும். இந்த ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம்தான் ஜாஸ் சினிமாஸ் என்று பெயர் மாற்றம் அடைந்தது என்பதை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள்.
மிடாஸ் கம்பெனியில் 38 சதவீத பங்குகளை வைத்திருப்பது ஸ்ரீ ஜெயா ஃபினான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனம். அந்த ஜெயா ஃபினான்ஸ் நிறுவனத்தில் ஜெயலலிதா 1.90 கோடி கடன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மட்டுமல்ல. சொத்துக்குவிப்பு வழக்கில் பினாமி நிறுவனங்கள் என்று சொல்லப்பட்ட லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடன் பெற்றுள்ளன. இந்த ஃபினான்ஸ் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பது, இளவரசி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மொத்தமாக சசிகலாவும் அவரது உறவினர்களும் நடத்துவது தான் மிடாஸ் நிறுவனம்.
2006ம் ஆண்டில் திமுக அரசு எங்களுக்கு சரிவர ஆர்டர்கள் வழங்கவில்லை என்று மிடாஸ் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடுத்தது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அந்த வழக்கில் மிடாஸ் சார்பில் ஆஜரானவர் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆட்சியில் மிடாஸ் கம்பெனிக்கு கணிசமான ஆர்டர்கள் கொடுப்பதற்காக ஏனைய பிரபலமான கம்பெனிகள் ஓரங்கட்டப்பட்டன. திமுக காலத்தில் 17 சதவீத மது பானங்களை டாஸ்மாக்குக்கு சப்ளை செய்த விஜய் மல்லய்யாவின் யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனம் அப்படி ஓரங்கட்டப்பட்ட பிரபல நிறுவனங்களில் ஒன்று. அதை தனது ஆண்டறிக்கையில் வெளிப்படையாக விமர்சனம் செய்தது யுனைடெட் ப்ரூவரீஸ். “தேசிய அளவில் பிரபலமான நிறுவனங்களை ஓரங்கட்டி விட்டு, உள்ளுரிலேயே இருக்கும் நிறுவனங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டது.
எனினும், 2011 டிசம்பரில் சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்துக்கு மீண்டும் யோகம் அடித்தது. இந்த காலகட்டத்தில் மிடாஸ் நிறுவனத்தில் சசிகலா நியமித்த நபர்கள் வெளியேற்றப்பட்டு, துக்ளக் சோ ராமசாமி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். சசிகலாவின் உறவினர் பிரபாவதியின் கணவரான டாக்டர் கே.எஸ்.சிவக்குமார்தான் இப்போதும் மிடாஸ் இயக்குநராக உள்ளார்.
இந்திய அளவில் பிரபலமாக உள்ள பிராண்டுகள் எதுவும் டாஸ்மாக் கடைகளில் அறவே கிடைப்பதில்லை. மிடாஸ் போன்ற வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக பிரபல பிராண்டுகள் முடக்கப்பட்டன. இதனால் 2011ல் 360 கோடி ரூபாயாக இருந்த மிடாஸ் வருமானம் 2013ல் 1077 கோடியாக எகிறியது.
மிடாஸ் நிறுவனத்துக்கு எல்லையற்ற தாராளம் காட்டப்படுவதாக கோல்டன் வாட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி தனபாலன் “சரக்கு கொள்முதல் செய்வதற்கு எந்தவிதமான அடிப்படை நியதிகளையும் டாஸ்மாக் பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது. கோல்டன் வாட்ஸ் நிறுவனத்திடமிருந்து 28,300 பெட்டிகள் வாங்கிய அதே ஆறு மாதத்தில் மற்ற நிறுவனங்களிடம் 10 லட்சம் பெட்டிகள் வாங்கியுள்ளது. இது சரியல்ல. அனைத்து நிறுவனங்களுக்கும் உரிய வாய்ப்பை டாஸ்மாக் அளிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பினாமி நிறுவனங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்ட பல நிறுவனங்களில் இன்று இயக்குநர்களாக உள்ள கார்த்திகேயன், கலியபெருமாள் மற்றும் கே.எஸ்.சிவக்குமார் ஆகியோர்தான் மிடாஸ் நிர்வாகத்தை இன்று கவனித்துவருகின்றனர். இந்த நிறுவனத்தின் வருமானம் நின்று விடப்போகிறது என்ற ஒரே காரணத்தாலேயே, மதுவிலக்கு கோரிக்கைக்கு பாராமுகம் காட்டி வருகிறது அதிமுக அரசு.
இதனால்தான் ஜெயலலிதா சொல்கிறார், மதுவாவது விலக்காவது savukkuonline.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக