வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

திருமாவளவன் உயிரைக் காப்பாற்றிய வாட்ஸ் - அப் மெசேஜ்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது.  இந்த சதியில் இருந்து அவரை காப்பாற்றியது எதிராளிகளின் வாட்ஸ் அப் மெசேஜ்தான்.முதல் நாள் இரவு முழுவதும் திருமாவளவன் வருகைக்கு எதிராக ஆதரவாளர்கள் வாட்ஸ் - அப்’பில் மெசேஜ் அனுப்பி பகிர்ந்துகொண்டனர்.  இந்த விசயம் போலீசாருக்கு தெரியவந்ததும்,  அவர்கள் உஷார் ஆனார்கள்.  அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து திருமாவளவனை பெட்ரோல் குண்டு வீச்சில் இருந்து காப்பாற்றியுள்ளது போலீஸ் அந்த வாட்ஸ் - அப் மெசேஜ்:’தென்மாவட்டங்களில் தொடர்ந்து சாதிக்கலவரங்ளை தூண்டிவரும் திருமாவளவன் ,தஞ்சை மாவட்டம் வடசேரி பகுதியில் சாதிய கலவரத்தை தூண்டும் விதத்தோடு கொடி யேற்றுவிழா நடத்த இருப்பதாக தகவல் தெரிந்தது. இதையறிந்த மக்கள் முன்னேற்ற கழகம் நாளை தடுத்து நிறுத்த உள்ளது..!


 மேலும் மக்கள் முன்னேற்ற கழக மாநிலத்லைவர் M.R.செங்குட்டுவன் வாண்டையார் அதை தடுக்கும் விதமாக  வடசேரியிலுள்ள பிள்ளையார் கோவில் முன்பு நாளை [20-08-15] ஊர்ப் பொதுமக்கள் மற்றும் சமுதாய உணர்வாளர்கள் காலை 08 மணியளவில் ஒன்று கூடவும்..!

ஒன்று கூடி தங்களது எதிர்ப்புகளை வலுவாக பதிவு செய்யவும்..!

 M.R.செங்குட்டுவன் வாண்டையார் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.

 உணர்வாளர்களே ஒன்று கூடுங்கள்..!       
-     இப்படிக்கு மக்கள் முன்னேற்றகழகம் மற்றும் முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை.’’

நடந்த சம்பவம் :

பட்டுக்கோட்டையில்  திருமண விழாவிற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருமணம் முடிந்து மன்னார்குடியில் ஒரு திருமணவிழாவில் கலந்துகொள்ள செல்லும் வழியில் வடசேரியில் கொடியேற்றிவிட்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு காவல்துறையிடம் அனுமதியும் வாங்கப்பட்டு இருந்தது. பட்டுக்கோட்டையில் இருந்து திருமாவளவன் புறப்பட்ட போது வடசேரியில் 40க்கும் மேற்பட்டவர்கள் கூடி திருமாவளவன் கொடியேற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததை தொடர்ந்து கலவரத்தை தடுக்கும் பொருட்டு திருமாவளவன் வடசேரி வருவதை தடுத்து வேறு வழியில் மன்னார்குடி செல்ல காவல்துறையினர் கேட்டுகொண்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஆலத்தூரில் உள்ள நுழைவுவாயில் அருகே சிலர் திருமாவளவனை தாக்கும் நோக்கத்தில் காத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததை தொடர்ந்து பட்டுக்கோட்டை தாலுக்கா காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் சென்ற காவல் துறையினர் அங்கு தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன், பெட்ரோல் குண்டுகளுடன்  நின்றிருந்த இளைஞர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் சிறப்பு ஆய்வாளர் ராஜேந்திரனை தாக்கிவிட்டு தப்ப முயன்றவர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்து வந்து வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பியுள்ளனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: