இந்தோனேஷியாவில் ஒரு தொலைவான மலைப் பகுதியில் ஞாயிறன்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஐந்துலட்சம் அமெரிக்க டாலர்கள் வரையான பணத்தை எடுத்துச் சென்றிருந்ததாக இந்தோனேஷிய தபால் அலுவலகம் தெரிவிக்கிறது.
அரசாங்கத்தினால் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதி பணம் நான்கு பைகளில் எடுத்துச் செல்லப்பட்டதாக பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜயபுராவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி பிபிசிக்குத் தெரிவித்தார்.
விபத்திற்கு உள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த 44 பேரில் எவராவது உயிர்பிழைத்துள்ளார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காக மீட்புப் பணியாளர்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்கின்றார்கள் bbc.tamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக