இந்தியாவில் உள்ள பெருவாரியான திருமணமான முஸ்லீம் பெண்கள் முஸ்லீம் தனி
நபர் சட்டத்தில் திருத்தம் செய்ய விரும்புகிறார்கள் என சமீபத்தில் நடத்திய
ஆய்வில் தெரியவந்து உள்ளது.
பாரதீய முஸ்லீம் மஹிலா ஆண்டோலன் அமைப்பு மொத்தம் 4710 திருமணமான முஸ்லீம்
பெண்களிடம் 10 மாநிலங்களில் இந்த ஆய்வை எடுத்து உள்ளது. இது குறித்த முடிவை
நேற்று வெளியிட்டது.
பாரதீய முஸ்லீம் மஹிலா ஆண்டோலன் ( BMMA) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்
விவகாரத்து சடங்கில் மூன்று தலாக்,பலதார மணம் ஆகியவற்றை தடை செய்ய
வேண்டும் என 90 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 75 சதவீதம் பேர் குழந்தை
திருமணத்தை தடை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர்.
இந்த ஆய்வின் மூலம் முஸ்லீம் பெண்கள் தங்கள் சட்ட உரிமையை தெரிந்து வைத்து உள்ளனர் எனவும், அவர்கள் குடுமப விஷயத்தில் தங்களுக்கு நீதி கிடைக்க உறுதியாக உள்ளனர் எனவும் தெரிகிறது. அதிமான முஸ்லீம் பெண்கள் இந்தியாவில் இன்று பரவலாக உள்ள முஸ்லீம் தனிநபர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர விரும்புகின்றனர் dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக