தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சிட்லாம் மாவட்டத்தில் பிரசித்த பெற்ற எராவன் என்ற பிரம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே 3 ஷாப்பிங் மால்களும், ஸ்டார் ஓட்டல்களும், பல வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. இது எப்போதும் மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி. நேற்று இரவு கோயில் வளாகத்துக்கு வெளியே இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் சக்தி வாய்ந்த வெடி குண்டு வெடித்தது. இதில் 25க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானபேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள வர்த்தக மால் ஒன்றில் நடிகை ெஜனிலியா பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். உடனே அங்கிருந்து வெளியேறினார். இதுகுறித்து அவர் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில்,‘வர்த்தக மாலில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு பயந்து அலறினேன். அந்த சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது பாதுகாப்பாக உள்ளோம். ஆனால் பலியானவர்கள் பற்றி அறிந்தேன். அந்த அதிர்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை’ என குறிப்பிட்டுள்ளா dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக