வியாழன், 16 ஜூலை, 2015

ஆம்பூர் கலவரம்! தினமலர் / ஆர்.எஸ்.எஸ் அரங்கேற்றிய பார்ப்பன விஷ பிரசாரம்....!

ambur 450
கடந்த 26 ஆம் தேதி ஆம்பூரில் கலவரம் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும். ஷமில் அகமது என்ற இளைஞர் மரணமடைந்ததை ஒட்டி ஏற்பட்ட பெரும் கலவரத்தில் பல போலீஸ்காரர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பழனி என்பவர் தன்னுடைய மனைவி பவித்ராவை ஷமில் அகமது என்பவர் கடத்திச் சென்று விட்டதாகவும் அவரை மீட்டுத்தருமாறும் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் கைது செய்யப்பட்ட ஷமில் அகமதுவை காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் தன்னுடைய வீட்டில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார், இதில் படுகாயம் அடைந்த ஷிமில் அகமது கடந்த 26 ஆம் தேதி மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே கலவரம் மூண்டுள்ளது. இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
கலவரத்துக்கான காரணம் ஷமில் அகமதுவா இல்லை பவித்ராவா என்று ஊடகங்கள் விவாதித்துக்கொண்டு இருக்கையில், பார்ப்பன தினமலர் தன்னுடைய ஆர்.எஸ்.எஸ் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கின்றது. தினமலர் பத்திரிக்கையில் வேலை செய்யும் பல எழுத்தாளர்கள் போனோகிராபி வகையறாக்கள் என்பதும் ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்களை அணிந்துகொண்டு அலுவலகத்துக்கு வருபவர்கள் என்பதுவும் நமக்கு ஏற்கெனவே தெரியும்.
கலவரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட தினமலர் அதை இப்படி வெளியிட்டு இருக்கின்றது.
"பவித்ரா மதம் மாற்றப்பட்டதாக “திடுக்’ தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை.
வேலூர் ஆம்பூர் கலவர விவகாரத்தில் மாயமான பவித்ராவை போலீசார் மீட்டுள்ளநிலையில் அவர் குறிப்பிட்ட மதத்திற்கு மாற்றப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது………
……...பவித்ராவின் பழைய காதலர்கள் என கூறப்படும் அரக்கோணம் சரவணன் 26, சென்னை குன்றத்தூர் மனோகரன் 34, காட்பாடி சரவணபெருமாள் 40, ஈரோடு சசிதரன் 34, ஆரணி செங்கமலம் 35 உள்பட 11பேரிடம் விசாரணை செய்தனர்……
ஆம்பூர் கலவரத்தின் முக்கிய காரணமான பவித்ரா குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மாற்றப்பட்டார். அந்த மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் பல கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் எதுவும் தெரியாது என பலரிடம் தெரிவித்து வருகின்றார். பவித்ராவின் பழைய காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றோம். அவரது அழகுக்கு மயங்கி அவர் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளனர். பழைய காதலர்களிடம் விசாரித்தால் ஷமில் அகமதுவின் தொடர்பு எவ்வளவு நாள் என்பது தெரிந்துவிடும்”.
இந்தத் தகவல்கள் காவல் துறை அதிகாரிகளால் சொல்லப்பட்டுள்ளது போன்று செய்தியை வெளியிட்டு இருக்கின்றது. பவித்ரா எத்தனை பேருடன் கள்ளக்காதல் வைத்திருந்தார் அவர்களின் வயது என்ன என்பதுவரை கண்டுபிடிக்க முடிந்த காவல்துறையால் அவரை யார் மதம் மாற்றினார்கள்? எப்போது மதம் மாற்றினார்கள்? என்று கண்டுபிடிக்க முடியாமல் போனது மிகப்பெரிய அவலமாகும். ஆனால் நம்முடைய சந்தேகமெல்லாம் உண்மையிலேயே இந்தத் தகவல்கள் காவல்துறை அதிகாரிகளால் சொல்லப்பட்டதா இல்லை தினமலரே போட்ட பிட்டா என்பதுதான். பவித்ரா எத்தனை பேருடன் கள்ளக்காதல் வைத்திருந்தார் என்பதை விட அவர் முஸ்லீம்மாக மாறியதால்தான் கள்ளக்காதல் வைத்தார் என காட்டவேண்டும். இதன் மூலம் கற்பில் சிறந்தவர்கள் இந்துப் பெண்கள் என்ற தனது உலுத்துபோன கற்பு பண்பாட்டுக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல பார்ப்பன தினமலரின் நோக்கம், ஆம்பூர் கலவரம் இஸ்லாமியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல இந்து காவல்துறை அதிகாரிகள் மிகக்கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதை வைத்து இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் போலவும் வன்முறையாளர்கள் போலவும் சித்தரித்து அதை தட்டிக்கேட்கவும் எதிர்த்து போராடவும் தமிழ்நாட்டில் தங்களை விட்டால் யாருமே கிடையாது என்ற தோற்றத்தை உருவாக்கவும் துடிக்கும் சங்பரிவாரங்களின் மதவெறி அரசியலுக்கு வக்காலத்து வாங்குவதுதான். அதற்காகத் தான் இவ்வளவு கீழ்த்தரமாக செய்தியை வெளியிட்டு இருக்கின்றது.
ஷமில்அகமதுவை மார்ட்டின் பிரேம்ராஜ் தன்னுடைய வீட்டில் அடைத்துவைத்து மிகக்கொடூரமான முறையில் தாக்கியதால்தான் அவர் மரணமடைந்தார் என்பது வெளிப்படையான செய்தி. ஆனால் அதை ஷமில் அகமது மர்மமாக இறந்தார் என்று எழுதுகின்றது தினமலரின் பார்ப்பன மூளை.
இந்தக் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் கத்திக்கொண்டு இருக்கின்றன. திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே இருக்கட்டும் அதில் என்ன தவறு இருக்கின்றது? ஷமில்அகமதுவின் மரணம் மட்டுமே கலவரத்துக்கான மூல காரணம் அல்ல; ஏற்கெனவே ராமநாதபுரம் கோட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சையத் முகமது என்ற இளைஞர் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தமிமுன் அன்சாரி என்ற 15 வயது சிறுவனை காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் தொண்டையில் சுட்டார். இப்படி இஸ்லாமிய இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது. ஆனால் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது வெறும் தற்காலிக பணியிடை நீக்கம் மட்டுமே!.
ஆர்.எஸ்.எஸ் காக்கிடவுசர்கள் காவல்துறை, நீதிமன்றம், இராணுவம் என அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளனர். அவர்கள் எப்போதும் இஸ்லாமியர்களை விரோதிகளாகவும் ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்களாகவுமே பார்க்கின்றனர். அந்த மனநிலையில் இருந்தே அவர்கள் இஸ்லாமியர்களை அணுகுகின்றனர். அதற்கு இந்த மரணங்களே ஒரு சாட்சி!
தொடர்ச்சியாக இந்திய சமூகத்தில் இந்துத்துவ வெறியர்களாலும் அவர்களைக் காப்பாற்றும் அரசாலும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை இனி, சட்டத்தின் துணை கொண்டு சரிசெய்ய முடியாது என்று முடிவு செய்த இஸ்லாமியர்களின் கோபமே ஆம்பூர் கலவரம். இந்துமத வெறியர்களை ஆடவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக அரசே இந்தக் கலவரத்துக்கான மூல காரணம்; பவித்ராவோ, ஷமில் அகமதுவோ அல்ல.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஊழல் இராணி ஜெயாவின் ஆட்சியில் அவிழ்த்து விடப்பட்ட வெறி நாய்களைப் போல அனைவரையும் கடித்துக் குதறிக்கொண்டு இருக்கின்றது காவல்துறை. சாதிவெறியர்களையும் மதவெறியர்களையும் அடக்கத் துப்பில்லாமல் அவர்கள் முன் மண்டிபோட்டு கிடக்கின்றது அரசும், அரசுஇயந்திரமும். இதை சுட்டிக்காட்டி மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டிய ஊடகங்கள் அவர்களுக்கு மாமா வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தினமலர் போன்ற பத்திரிக்கை விபச்சாரிகள் சாதிமத வெறியர்களையும், அதிகார வர்க்கத்தையும் நக்கிப் பிழைப்பதையே தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருக்கின்றன. எனவே தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், சாதிமத வெறியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் பார்ப்பன தினமலர் பத்திரிக்கையை தோழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.
- செ.கார்கி=  keetru.com

கருத்துகள் இல்லை: