வியாழன், 16 ஜூலை, 2015

டில்லியிலும் அம்மா உணவகம்? ஆம் ஆத்மியின் மலிவு விலை உணவகங்கள் விரைவில்!

தமிழகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற ’அம்மா உணவகம்’ போன்று புதுடெல்லியிலும் மலிவான விலையில் உணவு வழங்கும் ஆம் ஆத்மி உணவகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பல சர்ச்சைகளையும் சறுக்கலையும் சந்தித்து வந்தாலும் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது டெல்லி மக்களுக்கு மலிவான விலைக்கு உணவு வழங்கும் ஆம் ஆத்மி கேன்டீன் தொடங்க திட்டமிட்டு வருவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கேன்டீனில் மீல்ஸ் (meals) ஐந்திலிருந்து பத்து ரூபாய்க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மலிவு விலை கேன்டீன் முதற்கட்டமாக தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக ரீதி கல்விநிலையங்கள் உள்ள இடங்களில் அமைக்கப்பட உள்ளது. ஆம் ஆத்மி அரசு, அம்மா உணவக மாதிரியை பின்பற்றி இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அம்மா உணவகத்தில், தரமான உணவை, மலிவான விலைக்கு காலை,மதியம்,இரவு என மூன்று வேளையும் உணவு விற்கப்படுவது போல் டெல்லி அரசின் ஆம் ஆத்மி கேன்டீனிலும் உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது nakkheeran.in

கருத்துகள் இல்லை: