செவ்வாய், 14 ஜூலை, 2015

எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் !

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த, இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.< 87 வயதான விஸ்வநாதன், 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். தமிழ்தாய் வாழ்த்துப்பாடலான ‛நீராரும் கடலுடத்த..' பாடலுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர் எம்.எஸ்.வி., இவரது இறுதிச்சடங்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் நாளை நடைபெறுகிறது. வாழ்க்கை வரலாறு: இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளியில் 1928 ஜூன் 24ல் பிறந்தார். அவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்
.காதல் மன்னன், காதலா காதலா உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மெல்லிசை மன்னன் பட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சூட்டப்பட்டது. எம்.எஸ்.வி., பற்றிய சில தகவல்கள்.. 1928ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி கேரள மாநிலம், பாலக்காட்டில் பிறந்தவர் எம்.எஸ்.வி., இவரது முழுப்பெயர் மனையங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். இதை தான் இவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று சுருக்கி கொண்டார்.* 1952-ம் ஆண்டு என்.எஸ்.கிருஷ்ணன், தனது படமான ''பணம்'' படத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு வாய்ப்பு அளித்தார்.* 1952ம் ஆண்டு பணம் படத்தில் துவங்கிய இந்த இரட்டையர்களின் வெற்றி கூட்டணி 1965ம் ஆண்டு வரை தொடர்ந்தது. இருவரும் சேர்ந்து இந்த 13 ஆண்டுகளில், 100 படங்களுக்கு மேல் இசையமைத்தனர்.* தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 1200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் விஸ்வநாதன்.* ஒரு பாடலுக்கு 3 இசை கருவியையும், 300 இசை கருவியையும் பயன்படுத்திய ஒப்பற்ற இசையமைப்பாளர்.* நடிகர் சிவாஜி கணேசன் அவர்களால் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்தை பெற்று இன்று மெல்லிசை மன்னராக வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.எஸ்.வி.* காதலா காதலா, காதல் மன்னன், தகதிமிதா, அன்பே வா (புதியது), மஹாராஜா, தில்லு முல்லு (ரீ-மேக்) போன்ற படங்களில் நடித்தும் உள்ளார். இவர் இசையமைத்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில் உள்ளத்தில் நல்ல உள்ளம்(கர்ணன்), மயக்கமா கலக்கமா, மனிதன் என்பவன் தெய்வமாகலாம்(சுமைதாங்கி), வசந்தத்தில் ஓர் நாள்(மூன்று தெய்வங்கள்), எங்கே நிம்மதி(புதிய பறவை), அவளுக்கு என்ன அழகிய முகம்(சர்வர் சுந்தரம்), அதோ அந்த பறவை (ஆயிரத்தில் ஒருவன்) உள்ளிட்ட காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்கள் தந்தவர் எம்.எஸ்.வி. இளையராஜாவுடன் இணைந்து மெல்ல திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ் செல்வன், விஷ்வ துளசி போன்ற படங்களுக்கு இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். எம்.எஸ்.வி., இசையமைத்தது மட்டுமல்லால் 500 பாடல்கள் வரை பாடியுள்ளார். அதில் 200 பாடல்கள் பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். கலைமாமணி, பிலிம்பேர், வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட ஏராளமான கவுரவங்கள் இவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், தேசிய விருது, பத்ம விருதுகள் உள்ளிட்ட எதுவும் இதுவரை வழங்காதது துரதிர்ஷ்டமே தினமலர்.com 

கருத்துகள் இல்லை: