சனி, 18 ஜூலை, 2015

நீரிழிவு நோயை தடுக்கும் மஞ்சள், ஒமேகா 3

சிட்னி: மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனப்படும் வேதிப் பொருளும், சில வகை மீன்களில் இருக்கும் ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்களும் நீரிழிவு நோயை வரவிடாமல் தடுப்பதாக சமீபத்ய ஆய்வுகள் மூலம் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் நியூகேஸ்டில் பல்கலை விஞ்ஞானிகள், இந்திய மரபு வழி மருத்துவ விஞ்ஞானி மனோகர் கார்க் தலைமையில் நடத்திய ஆய்வில் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. மனோகர் கார்க் கூறுகையில், ' நீரிழிவு நோய்க்கு மூல காரணமாக இருப்பது மண்ணீரலில் ஏற்படக்கூடிய அழற்சியால் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படுவது தான்' என்றார். இயற்கையாக கிடைக்க கூடிய மஞ்சளில் இருக்கும் குர்குமின் வேதிப்பொருளும், ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலமும் ஒரே நேரத்தில் உட்கொள்ளப்படும் போது, மண்ணீரலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளதால், மண்ணீரலில் அழற்சி தடுக்கப்பட்டு நீரிழிவு நோய் தடுக்கப்படுவதாக ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.


ஆனால் இன்றைய நாட்களில், குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இயற்கையான மஞ்சள் கலந்த உணவுகளை உண்ணத் தவறுவதால், அதன் மூலமாக கிடைக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கிடைப்பதில்லை என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மஞ்சளும், ஒமேகா 3 வகை கொழுப்பும் தனித்தனியே உட்கொள்ளப்படும் கிடைக்கும் பலனை விட சேர்த்து உட்கொள்ளப்படும் போது அதிக பலன் கிடைப்பதாக தினமலர்.com 

கருத்துகள் இல்லை: