ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

மற்றொரு பிரிட்டன் பிணைக்கைதி கொடூர கொலை: ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்ட வீடியோ

பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் சிக்கிய மற்றொரு பிரிட்டன் பிணைய கைதி கொடூரமாக தலை துண்டித்து கொல்லப்பட்டார். வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், சிரியா மற்றும் ஈராக் அரசு படைகளுக்கு எதிராக, கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலே, கடந்த ஆக். 19 அன்றும், ஸ்டீவன் ஸ்டோல்ப், இம்மாதம் 2-ம் தேதியன்றும் தலையை துண்டித்து கொன்றனர். இதற்கான வீடியோ காட்சி வெளியானது. இதற்கு அதிபர் ஒபாமா உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

எனினும் ஐ.எஸ். அமைப்பினை ஒழித்துக்கட்டாமல் விடப்போவதில்லை அவர்கள் மீது வான் தாக்குதல் தொடரும் என அமெரிக்க அதிபர் ஒபாமா சூளூரைத்தார். இவரது பேச்சிற்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் ஹெய்ன்ஸ் (44) என்ற தொண்டு நிறுவன ஊழியர் ஈராக், சிரியா எல்லையில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் சிக்கினார். அவரை மூகமூடி அணிந்த பயங்கரவாதிகள் தலையை துண்டித்து கொன்றனர். முன்னதாக பயங்கரவாதிகள் பேசிய உரை எஸ்.ஐ.டி.இ. என்ற டி.வி.யில் 2 நிமிடம் 27 நொடிகள் ஒளிப்பரப்பானது. அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்த பிரிட்டனுக்கு எச்சரிக்கை விட இந்த கொலை எனவும் பயங்கரவாதிகள் தெரிவித்தனர்.இதன் மூலம் மூன்றாவது கொடூரத்தை ஐ.எஸ்.பயங்கரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன் தான் ஹெயின்சை விடுவிக்கவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தீவிரவாதிகளிடம் வேண்டுகோள் வைத்திருந்தனர். இந்நிலையில் தான் அவர் கொல்லப்பட்டுள்ளார். பாதுகாப்பு நிபுணரான ஹெயின்ஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு சிரியாவில் வேலை செய்தபோது காணாமல் போனார். அவருக்கு 17 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிரிட்டன் வெளியுறவுஅமைச்சகம் உறுதி: பிரிட்டன் பிணையக்கைதி கொடூர கொலை வீடியோவை உறுதி செய்துள்ளது பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம்.பிரிட்டன் பிரதமர் கண்டனம்: பிரிட்டன் தொண்டு நிறுவன ஊழியரை பிணைக்கைதியாக்கி கொலை செய்த தகவல் தெரிந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கடும் கண்டனம் தெரிவித்ததோடு சரியான நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: