வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சில பெண்கள் தரக்குறைவாக பேசியதால் அசிட் வீசினானாம் ! சைகோ வாலிபன் வாக்குமூலம் !

ஊமச்சிகுளம்,: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் மீது 'ஆசிட்' வீசி கைது செய்யப்பட்ட சங்கரநாராயணனுக்கு, 24, மதுரை அரசு மருத்துவமனையில் செப்.,30 வரை மனநல சிகிச்சை அளிக்க கோர்ட் உத்தரவிட்டது.மதுரை பேரையூர் அருகே சின்னபூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மீனா, அங்காளஈஸ்வரி. திருமங்கலம் மதுரை காமராஜ் பல்கலை உறுப்புக்கல்லூரியில் படிக்கின்றனர். செப்.,12ல் கல்லூரி முடிந்து பஸ் ஸ்டாண்ட் வந்தபோது மொட்டை தலையுடன் வந்த நபர், இருவர் மீதும் 'ஆசிட்' வீசி தப்பினார்.காயம் அடைந்த மாணவிகள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 'ஆசிட் நபரை' பிடிக்க ஆறு தனிப்படைகளை விஜயேந்திரபிதரி எஸ்.பி., அமைத்தார்.இந்நிலையில், திருமங்கலம் சுங்குவார்பட்டியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் சுதாகர், 'என் மகன் சங்கரநாராயணன் தான் 'ஆசிட்' ஊற்றினான்' என எஸ்.பி., யிடம் மகனை ஒப்படைத்தார்.
விசாரணையில் 'உண்மை' என தெரியவந்ததால், சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டார்.நேற்று, கூடுதல் எஸ்.பி., கோபால்சாமி தலைமையில் டி.எஸ்.பி., அரசு, இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் திருமங்கலம் கோர்ட்டில் சங்கரநாராயணனை ஆஜர்படுத்தினர். செப்.,30 வரை மதுரை அரசு மருத்துவமனையில், போலீஸ் காவலில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க, மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.எஸ்.பி., கூறியதாவது: சங்கரநாராயணன் மனநலம் (சைகோ) பாதிக்கப்பட்டவர். சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் அப்பகுதியில் நடந்து செல்லும்போது தன்னை சில பெண்கள் தரக்குறைவாக பேசியதாகவும், அதனால் மனஉளைச்சல் அதிகமாகி 'ஆசிட்' வீசியதாகவும் கூறினார். 'ஆசிட்' வீசும்போது அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர், என்றார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: