சனி, 13 செப்டம்பர், 2014

ஸ்காட்லாந்து மாதிரி கருத்துக்கணிப்பில் பிரிவினைக்கு எதிரான அணி முன்னிலை

பிரிட்டிஷ் குடியரசிலிருந்து பிரிந்து தனித்து செயல்படுவதுகுறித்து ஸ்காட்லாந்தில் வரும் 18ஆம் தேதி பொதுமக்கள் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்தப் பிரிவினைக்கு எதிராக ராணியாரும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ராயல் ஸ்காட்லாந்து வங்கி உட்பட பல முன்னணி நிறுவனங்களும் பிரிவினைக்குப்பின்னர் தாங்கள் ஸ்காட்லாந்திலிருந்து வெளியேறிவிடுவதாகவும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் நேற்று நடைபெற்றுள்ள மாதிரி கருத்துக்கணிப்பில் பிரிவினைக்கு எதிரான அணி 52 சதவிகிதமும், ஆதரவு அணி 48 சதவிகிதமும் பெற்றுள்ளது. ஆகஸ்ட் துவக்கத்தில் இருந்து இந்த அணி முன்னிலை பெற்றுள்ளது இதுவே முதல் முறை என்று கருத்துக்கணிப்பை நடத்திய யூகௌ நிறுவனத்தின் தலைவர் பீட்டர் கெல்னர் தெரிவித்துள்ளார்.


மற்றொரு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் இங்கிலாந்து ஆதரவு அணிக்கு 51 சதவிகிதமும், எதிரணிக்கு 49 சதவிகிதமும் கிடைத்துள்ளது. இதில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கூறியவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். செவ்வாய் முதல் வியாழன் வரை நடைபெற்ற தொலைபேசி கருத்துக்கணிப்பில் 17 சதவிகிதத்தினர் ஓட்டு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும் தெளிவாகாத இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தங்களிடமுள்ள ஸ்காட்லாந்து நாட்டின் பங்கு வெளியீடுகள், நாணயம் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்க பத்திரங்களை விற்க முன்வந்துள்ளனர்.

வாக்கெடுப்பிற்குப்பின் இரு நாடுகளும் 2.5 டிரில்லியன் டாலர் மதிப்பீடு கொண்ட இங்கிலாந்துப் பொருளாதாரம், வட கடல் எண்ணெய்வளம் மற்றும் கடன் தொகை அனைத்தையும் பிரிக்கும் பணியில் ஈடுபடவேண்டியிருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர் maalaimalar.com

கருத்துகள் இல்லை: