வெள்ளி, 19 செப்டம்பர், 2014

தமிழ் சினிமாவின் புரட்சி ஆண்டு ? இதுவரை 200 படங்கள் ரிலீசாகியுள்ளது.நாளை 9 படம் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பெரும் புரட்சியை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு  இதுவரை 200 படங்கள் ரிலீசாகியுள்ளது.
கடந்த 9 மாதங்களில் 200 படங்கள் ரிலீஸ் ஆகியிருப்பது வரலாற்று சாதனை தான். வாரந்தோறும் குறைந்தது 5 படத்திற்கு மேல் ரிலீஸ ஆகிவருகிறது.இது ஆரோக்யமான விஷயம் தான் என்றாலும், அத்தனை படங்களும் குறுகிய நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடாமலும், லேட்டாக பிக்கப் ஆகும் படங்களுக்கு வசூல் கிடைக்கமாலும் போகும் நிலை ஏற்படும் என்று அச்சமும் நிலவுகிறது.
எது எப்படியே நாளைக்கு (செப் 19) 9 படங்கள் ரிலீசாகிறது.
நாளை ரிலீசாகும் படங்களில் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மணை மட்டுமே மிகப்பெரிய பட்ஜெட் படம்.  பேய் படமுன்னு சொல்லாலாம். காமடியாக படத்தை எடுத்துள்ள சுந்தர் சியுடன்,  வினய், ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சந்தானம் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.

இதன்பின் பார்த்தால், தில்லுமுல்லு படத்திற்கு பிறகு பத்ரி இயக்கி உள்ள ஆடாம ஜெயிச்சோமடா நாளை ரிலீசாகிறது. இது கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள காமெடி படம். சமீபத்தில் காமெடி நடிகரான அறிமுகமான கருணாகரன் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயின் விஜயலட்சுமி. சிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
நீண்ட நாளாக வெளியாகமல் இருந்த ரெட்டவாலு நாளை ரிலீசாகிறது. கல்லூரி அகில், காதல் சரண்யா நடித்திருக்கிறார்கள். வாலுத்தனமாக சுற்றித் திரியும் ஒருவனுக்கு வரும் காதலும்,  அதனால் ஏற்படும் பிரச்சினையுமே ரெட்டவாலு படத்தின் கதையாம்.
"ஆள்"  படம் வித்தியாசமான க்ரைம் திரில்லர். ஒரு இளைஞனை தீவிரவாதிகயாக்க நினைக்கும் ஒரு சர்வதேச தீவிரவாத கும்பலிடமிருந்து அந்த இளைஞன் தப்பித்தானா, தீவிரவாதியாகிறானா? என்கிற கதை.
மடிசார் மாமி என்று தலைப்பிட்டு பின்னர் எதிர்ப்பு காரணமாக  இனிப்பு புளிப்பு என்ற பெயர் மாற்றப்பட்ட படம் நாளைக்கு வருது. இதுகு டும்பத்தோடு பார்க்ககூடிய காமெடிப் படமாம்.
கூலிக்காக கொலை செய்யும் ஒருவன். தான் செல்போனிலேயே காதலிக்கும் தன் காதலியை அவர் யார் என்று தெரியாமல் கொல்கிற கதை தமிழ் செல்வனும் கலைச் செல்வியும்.
உசிலம்பட்டி பஸ் நிலையத்தையே வீடாக கொண்டு வாழ்கிறவர்களின் வாழ்க்கையை சொல்லுகிற படம் நான் பொண்னொன்று கண்டேன். இதுதவிர புதியவர்கள் இயக்கிய மைந்தன் என்ற படமும். ரகசிய தீவு என்ற ஆங்கில அனிமேஷன் படமும் நாளை ரிலீசாகிறது.
இத்தனை படத்திற்கு எத்தனை தியேட்டர் என்பது தெரியவில்லை. சென்னையில் இனி வெள்ளி, சனி, ஞாயிறுகளில் படத்திற்கு டிக்கெட் கிடைக்குமான்னு தெரியாதுப்பா, ஏன்னா அத்தனை பெரிய நடிகர்கள் படமும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ரிலீஸ் ஆகுது... dinamani.com

கருத்துகள் இல்லை: