சனி, 20 செப்டம்பர், 2014

கூட்டணி மந்திரிசபை அமைக்க கலைஞர் புதிய திட்டம்!

வரும் சட்டசபை தேர்தலில், பலமான கூட்டணி அமைவதற்காக, தமிழகத்தின் முக்கிய கட்சிகளுக்கு வலை விரிக்கவும், மூன்றாவது அணி உருவாகி, கட்டவிழ்க்கப்பட்ட மூட்டையிலிருந்து சிதறி ஓடும் நெல்லிக்காய்களை போல, ஓட்டுகள் சிதறுவதை தடுக்கவும், கேரளாவில் நடைபெறும் கூட்டணி ஆட்சி பார்முலாவை, தமிழகத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தவும், தி.மு.க., தலைவர் கருணாநிதி புது திட்டம் வகுத்துள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த செய்தி தினமலரின் ஊகத்தின் அடிப்படையிலான செய்தி இல்லை என்பதை உறுதி படுத்த விரும்புகிறோம், பேச்சு வார்த்தைகள் நடை பெறுவதாகதான் தெரிகிறது


படுதோல்வி: லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., - பா.ஜ., - ம.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகள் அமைத்த மூன்றாவது அணியால், தி.மு.க.,வும் படுதோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க.,வுக்கு இருந்த கடும் அதிருப்திக்கு இடையிலும், தி.மு.க.,வால், 90 இடங்களுக்கும் கூடுதலாக வெற்றி பெற முடியவில்லை. இதனால், பெரும்பான்மை பலம் இல்லாமல், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், தி.மு.க., ஆட்சி அமைத்தது. 2011 சட்டசபை தேர்தல், 2014 லோக்சபா தேர்தல் போன்றவற்றில் தி.மு.க., முழு வெற்றியை பெறாததால், அக்கட்சி, அரசியல் ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய
கட்டாயத்தில், அக்கட்சி இருக்கிறது. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கும், ஸ்டாலின் தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும், முதல்வர் வேட்பாளராக அவரையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும், ஸ்டாலின் ஆதரவாளர்கள் குரல் எழுப்பினர். ஆனால், இதை கட்சியிலும் வெளியேயும் பலரும் ரசிக்காததால், கட்சிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது.இதை, ஸ்டாலினுக்கு புரியவைத்து, அவருடைய ஆதரவாளர்கள், அக்கருத்தை முன்னிலைப்படுத்த வேண்டாம் என, கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனால், 'அடுத்த சட்டசபை தேர்தலை கருணாநிதி தலைமையில் தான்சந்திப்போம்; தி.மு.க., வென்றதும், முதல்வராக கருணாநிதி தான் பொறுப்பேற்பார்' என்று, முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசினார்.

இதைத் தொடர்ந்து, தே.மு.தி.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளுடன் எப்படியாவது, அடுத்த தேர்தலுக்கு தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்து விட வேண்டும் என, களத்தில் இறங்கி செயல்பட ஆரம்பித்து விட்டார் கருணாநிதி. கூட்டணி சரியாக அமைவதற்காக, கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு, நிறைய தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் கருணாநிதி தயாராக இருப்பதாக வும் தெரிகிறது.கூடவே, தி.மு.க., கூட்டணிகூடவே, தி.மு.க., கூட்டணிவெற்றியடைந்தால், ஆட்சியில் பங்கு என்ற பார்முலாவை, முதன் முதலாக, அறிமுகப்படுத்தவும், தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தொடர் தோல்விகளில் இருந்து எப்படியாவது மீண்டெழ வேண்டும் என்கிற நிர்பந்தத்தில், தி.மு.க., உள்ளது. அதனால், முக்கிய கட்சிகளை தி.மு.க., கூட்டணிக்கு கொண்டு வருவதற்காக, ஆட்சியில் பங்கு என்ற அஸ்திரத்தை கருணாநிதி கையில்எடுத்துள்ளார்.
கேரள மாடல்:கேரளாவில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, கூட்டணி ஆட்சிகளைநடத்துகின்றன.அதேபோல, மத்தியில் பா.ஜ., பெரும்பான்மை பெற்றிருந்தும், அகாலி தளம், சிவசேனா, லோக் ஜனசக்தி, தெலுங்கு தேசம் ஆகிய கூட்டணிகட்சிகளுக்கு, அமைச்சரவையில் இடம் அளித்திருக்கிறது. அதே பாணியை, தமிழகத்திலும் செயல்படுத்த, கருணாநிதி தயாராகியுள்ளார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருணாநிதியின் இந்த பார்முலாவிற்கு, தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் ஆதரவு கரம் நீட்டுமா என, தெரியவில்லை.
- நமது நிருபர் -dinamalar.com 

கருத்துகள் இல்லை: