
கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் பிரச்சினை தலைதூக்கியுள்ள
லண்டனில் இன்று பாகிஸ்தான் விமானம் ஒன்று சிறை பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சற்று முன்னர், லாகூரில் இருந்து மான்செஸ்டருக்கு 297 பயணிகளுடன் மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமானம் ஒன்றில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பிரிட்டிஷ் விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள் நடுவானிலேயே இருபுறமும் சூழ்ந்து, அங்கிருந்து லண்டனுக்கு வடகிழக்கே உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளன. இதனால், லண்டன் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தீவிரவாதம், விமானக் கடத்தல் உள்ளிட்ட அனைத்து அவசர நிலை பிரச்சினைகளையும் இங்கிலாந்து பாதுகாப்பு படையினர், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் வைத்து கையாளுவதுதான் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக